போட்டி போட வா நண்பா - இயக்குனர் தினேஷ்குமார்| Dinamalar

போட்டி போட வா நண்பா - இயக்குனர் தினேஷ்குமார்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
போட்டி போட வா நண்பா - இயக்குனர் தினேஷ்குமார்

இன்று பல துறைகளில் இளைஞர்கள் புதுமைகளையும், சாதனைகளையும் செய்து வருகிறார்கள். போட்டியில்லாத துறை எது, 'போட்டி போடலாம், வா நண்பா' என சினிமா கனவுகளுடன் குறும்படம் மூலம் அறிமுகமானவர் தினேஷ்குமார்.சென்னைக்காரர். படிப்பு எம்.எஸ்.சி., சிறு வயதில் இருந்தே புகைப்படம், வீடியோ எடிட்டிங்கில் தனி ஆர்வம். ஆறு வயதில் அலைபேசியில் எடுக்க ஆரம்பித்து இன்று டிஜிட்டல் கேமராவை கொண்டு சமூக சிந்தனைகளை மையமாக கொண்டு 17 குறும்படங்கள், 2 ஆல்பம் 'பாடல்' வீடியோ இயக்கியுள்ளார். அதில் 'லைப் ஆப் அன் ஆம்புலன்ஸ் டிரைவர்' ஆவணப்படத்திற்கு, 2 தேசிய விருது கிடைத்துள்ளது.நடிகர் நாசர், தம்பிராமையா, இயக்குனர் பாக்யராஜிடம் பயிற்சி, பாராட்டு பெற்றவர். இவர் இயக்கிய 'எலுமிச்சை, லைப் ஆப் அன் ஆம்புலன்ஸ் டிரைவர்' குறும்படங்கள் 'யூ டியூப், பேஸ்புக், டுவிட்டர்' ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நல்ல கதையம்சம், காதல் வசீகரம், குடும்ப பாங்கான சினிமாவை இயக்கும் கனவில், அதற்கான கதை தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளார். கதை ஒகே ஆனதும், சினிமாவை இயக்க துடித்து கொண்டிருக்கும் தினேஷ்குமார் கூறியது:ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறை பிடிக்கும். எனக்கு சினிமா பிடிக்கும். நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களுக்கு எப்போதும் மக்கள் ஆதரவளிப்பர். அது தான் என் குறும்படங்களுக்கும் கிடைத்த வரவேற்பும், 2 தேசிய விருதுகளும். கேமராமேன், எடிட்டர், இயக்குனராக இருந்து நானே குறும்படங்களை இயக்கினேன்.சினிமாவில் எனக்கு பிடித்தமானவர்கள் கமலஹாசன், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். தினமும் நிறைய இயக்குனர்கள் சினிமாவுக்குள் வருகிறார்கள். போட்டி இருந்தால் தான் நமக்கான அடையாளத்தை, திறமையை வெளிக்காட்ட முடியும். ஒரு திரைப்படத்தோடு விரைவில் என்னை திரையில் நீங்கள் பார்ப்பீர்கள், என்றார்.dhineshkumarmedia@gmail.com. ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை