ஜப்பான் பிரதமருக்கு குஜராத் சைவ உணவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜப்பான் பிரதமருக்கு குஜராத் சைவ உணவு

Updated : செப் 13, 2017 | Added : செப் 13, 2017 | கருத்துகள் (22)
Advertisement
ஜப்பான், பிரதமர், ஷின்ேஷா அபே, குஜராத், சைவ உணவு வகைகள், ஆமதாபாத்

ஆமதாபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ேஷா அபே மற்றும் அவரது மனைவி அகி அபே ஆகியோருக்காக குஜராத் வகை சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.ஜப்பான் பிரதமருக்கு 30 வகை உணவுகள்

'ஷபா' அணிந்த ஊழியர்கள்

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் மங்கல்தாஸ் ஹெரிடேஜ் ஓட்டல் உள்ளது. அங்குள்ள அகாஷியி என்ற பிரபலமான உணவகத்தில் தான் ஜப்பான் பிரதமருக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. உணவுகளை பரிமாற வேட்டி, குர்தா மற்றும், 'ஷபா' என்று அழைக்கப்படும் விசேஷமான தலைப்பாகை அணிந்த ஓட்டல் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


விருந்திற்காக, 30 வகையான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இட்லியை போல, குஜராத்தில் கடலை மாவில் செய்யப்படும் காமன் டோக்லா என்ற உணவு வகை பிரபலமானது. இது, இந்த விருந்தில் இடம் பெற்றுள்ளது. சேப்பங்கிழங்கில் செய்யப்பட்ட, 'ராஸ்பட்ரா', கொண்டகடலையில் செய்யப்பட்ட, 'கோடா பிரிட்டர்ஸ்', கிச்சடி, கொண்ட கடலை கிரேவி, பூசணி வகை உணவு, குஜராத்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு கறி, ரொட்டி வகைகள், பூரி,

இத்துடன் தொட்டு கொள்வதற்காக சேமியா தூவி தக்காளி போட்டு செய்யப்பட்ட, 'உந்தியூ', பூண்டு மற்றும் உருளைகிழக்கு போட்டு செய்யப்பட்ட, ' லாசானியா பாடிடா', பருப்பு வகைகள், தயிரில் வெங்காயம் போட்ட' ரைதா' தயிரில் செய்யப்பட்ட இனிப்பு வகையான, 'ஸ்ரீகந்த்', மசாலா மோர் உள்ளிட்ட உணவு வகைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.2 தலைமை சமையல்காரர்கள்

ஓட்டல் ஊழியர்களை கண்காணிக்க, அரசு மூலம் நியமிக்கப்பட்ட இரண்டு தலைமை சமையல்காரர்கள் அந்த ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ஜப்பானை சேர்ந்தவர்.மற்றொருவர் குஜராத்தை சேர்ந்தவர். என்னென்ன உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன என்பதை அவர்கள் கண்காணிப்பார்கள்.


ஜப்பான் மக்கள் மீன் வகைகள் மற்றும் இறைச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதே நேரத்தில், பவுத்த மத வழக்கப்படி, சைவ உணவு வகைகளையும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள். எனவே, குஜராத் மாநிலம் வரும் ஜப்பான் பிரதமர் மற்றும் அவரது மனைவிக்கு குஜராத் வகை சைவ உணவு வகைகளே சமைக்கப்பட்டுள்ளன.


Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek -  ( Posted via: Dinamalar Android App )
13-செப்-201719:09:44 IST Report Abuse
vivek How shame this bjp guys changed gujarat as the capital of India.
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
14-செப்-201701:18:51 IST Report Abuse
yaaroதானும் படுக்காம தள்ளியும் படுக்காம ..அவனாவது முன்னேறிட்டு போறான் ..நாம திராவிடம், சமூக நீதி, ஆரிய எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, திட்டங்கள் எதிர்ப்பு, எதிர்ப்பு எதிர்ப்பு போராட்டம் போராட்டம் அப்படின்னே திரிவோம் . என்ன நம்பிக்கைல இப்படி ஒரு திட்டத்தை தமிழ்நாட்டிலே கொண்டு வர முடியும். இன்னைக்கு கையெழுத்து போட்டுட்டு சில வருஷம் கழிச்சு வெக்கமே இல்லாம அத எதிர்த்து போராடுவோம் ....
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
13-செப்-201718:14:29 IST Report Abuse
Kailash வாழ்ந்தால் ஒரு நாட்டின் அதிபராக வாழ வேண்டும். மக்களாக வாழக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Shriram - Chennai,இந்தியா
13-செப்-201718:12:22 IST Report Abuse
Shriram இல்லே ஜப்பான்ல அவங்க மக்கள் இந்த பிரதமர் ஊர் சுத்திடுறார்ன்னு கிண்டல் செய்வார்களா ? இல்ல போயிட்டு நாட்டுக்கு ஏதாவது நல்லது செஞ்சுட்டு வாங்கன்னு சந்தோசம்மா அனுப்பி வெப்பங்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை