முதல்வர் எடப்பாடி அரசை கவிழ்க்கலாம்: சிறையில் இருந்து சசிகலா பச்சை கொடி| Dinamalar

முதல்வர் எடப்பாடி அரசை கவிழ்க்கலாம்: சிறையில் இருந்து சசிகலா பச்சை கொடி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
சசிகலா, முதல்வர் பழனிசாமி, ஆட்சி
Share this video :
ஆட்சியைக் கவிழ்க்க சசிகலா பச்சைக்கொடி
Powered by Sathya

சென்னை:முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.,வினர் பொதுக் குழுவைக் கூட்டி, கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து சசிகலாவையும், துணைப் பொதுச் செயலர் பதவியில் இருந்து டி.டி.வி.தினகரனையும் நீக்கி விட்டனர்.இப்படி நடக்கப் போகிறது என்பதை ஒரு வார காலத்துக்கு முன்பே, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, கட்சியின் கர்நாடக மாநில செயலர் புகழேந்தி சொன்னபோது, அப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள் என சொல்லி, புகழேந்தியை சமாதானப்படுத்தி அனுப்பினார் சசிகலா. கூடவே, பொதுக்குழு நாளில் என்ன நடக்கிறது என்பதை தனக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும் சசிகலா கேட்டுக் கொண்டார்.அதே போல், சசிகலாவுக்கு, பொதுக்குழு தகவல்கள் கொண்டு சேர்க்கப்பட்டன. தன்னை கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்கி விட்டனர் என்ற தகவல் அறிந்ததும், சசிகலா அப்செட் ஆகி விட்டார்.இப்போது என்னை, கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்கியிருப்பவர்கள் அனைவருக்குமே, ஏற்கனவே கட்சியின் பொதுச் செயலராக ஜெயலலிதா இருந்த போது, நான் தான் பொறுப்புகள் தந்தேன். ஜெயலலிதா பெயரில் அறிவிப்புகள் வந்தாலும், அதை பின்னணியில் இருந்து செய்தது நான் தான். அவர்கள்தான் இப்போது என்னை பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கின்றனர். இது தான் உலகம் என்று சொல்லி புலம்பித் தீர்த்திருக்கிறார்.பதவியில் இருந்து இறக்க வேண்டும்:உச்சபட்சமாக முதல்வர் பழனிச்சாமி, எனக்கும் அவரை நம்பிய எனது குடும்பத்தாருக்கும் நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டார். அதனால், இனிமேலும், அவரை தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்க விடக் கூடாது. அவரை எப்படியாவது ஆட்சிப் பொறுப்பில் இருந்து இறக்கி ஆக வேண்டும். அதை நோக்கி அரசியல் செய்வதுதான், இனி, தினகரனின் முழு நேரப் பணியாக இருக்க வேண்டும். எதை செய்தால், முதல்வர் பழனிச்சாமி அரசு கவிழுமோ, அதைச் செய்ய வேண்டும். இதை எனது உத்தரவாக, கட்டளையாகவே, தினகரனிடம் சொல்லி விடுங்கள். அவர் இனிமேல், ஆட்சியை கவிழ்த்து விட்டு, அந்த செய்தியோடு என்னை வந்து சந்தித்தால் போதும் என, தன்னை சந்திக்க வந்தவர்கள் மூலம் சசிகலா சொல்லி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.அதை வைத்துத்தான், இனியும், என் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள், அரசை நீடிக்க விடுவது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கக்கூடும் என்று, தினகரன் தெரிவித்து, ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (74)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-201705:48:45 IST Report Abuse
உஷாதேவன் நல்ல மனம் வாழ்க நாடு தூற்ற வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Bala -  ( Posted via: Dinamalar Android App )
14-செப்-201705:17:21 IST Report Abuse
Bala பாவங்ளும் துரோகங்களும் சும்மாவிடாது துரத்திக்கொண்டேயிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
14-செப்-201704:07:12 IST Report Abuse
Amma_Priyan எங்கோ இலவசமாக வந்த ஒரு பச்சை புடவைய தூக்கி எறிந்தால் அது கொடி ஆட்டுறதா..ஆட்டு தாயே ஆட்டு..வேட்டு வக்கர வரைதான் ஆட்டமுடியும்
Rate this:
Share this comment
Cancel
N. Sridhar - Kanchipuram  ( Posted via: Dinamalar Windows App )
14-செப்-201701:46:08 IST Report Abuse
N. Sridhar திருந்தாத பிறவிகள் இருந்தென்ன லாபம்.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
13-செப்-201721:18:07 IST Report Abuse
dandy செய்த பாவம் ..மோசடிகள் தான் ஆயாவின் மணவாளன் இப்பொது மருத்துவ மனையில் ,,,நுரை ஈரல் ..கிட்னி ...இதயம் ..ஈரல் எல்லாம் பழுதாகி விட்டதாம் ..
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
13-செப்-201721:15:50 IST Report Abuse
dandy ஜெயா மரண விசாரணையை உடனே தொடங்கவும்
Rate this:
Share this comment
Cancel
Jagadeeskumar - Salem,இந்தியா
13-செப்-201720:50:44 IST Report Abuse
Jagadeeskumar கெட்ட எண்ணம் புடிச்சவர்
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13-செப்-201720:50:37 IST Report Abuse
A.George Alphonse This woman's revenge mentality has come out automatically through her mouth.She is like a beaten snake and wounded lioness and she won't sleep herself and also allow others to sleep unless her goal is achieved.On her advise and commands only Dhinakaran is giving angry and meaningless statements daily to unseat Mr.EPS in CM chair.She and Dhinakaran may go any extend to remove Mr.EPS from CM post and can choose any one as per their choice in coming days.
Rate this:
Share this comment
Cancel
Muruganandam Moola Natchathiram - Thirunallar,இந்தியா
13-செப்-201720:49:18 IST Report Abuse
Muruganandam Moola Natchathiram எடப்பாடிக்கு மானம் இருந்தால் சசிகலா காலில் விழுந்து பெற்ற பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel
Jagadeeskumar - Salem,இந்தியா
13-செப்-201720:49:11 IST Report Abuse
Jagadeeskumar இந்த ஆட்சியை ஆட்டவும் முடியாது அசைக்கவும் mudiyathu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.