தாம்பரம் செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில் இயக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில் இயக்கம்

Added : செப் 13, 2017
Advertisement
 தாம்பரம்,செங்கோட்டை,சிறப்பு கட்டண ரயில், இயக்கம்

சென்னை: காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை க்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு விருத்தாசலம் திருச்சி வழியாக இயக்கப்படும். மேலும் தாம்பரம்- செங்கோட்டை ரயில் செப்.,15,16,18.20,21,22,23,25,27,28,29 ஆகியதேதிகளில் அதிகாலை 5மணிக்கு புறப்படும். அதே போல் செங்கோட்டை-தாம்பரம் ரயில் 16,17,19,21,22,23, 24,26,28,30ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுநாளை செப்.,14 காலை 8 மணிக்கு துவங்குகிறது.
மேலும் ஸ்ரீரங்கம் -பொன்மலை இடையே இரட்டை இருப்பு பாதை பணிகள் நடைபெறுவதால் திருச்சி-லால்குடி, திருச்சி-தஞ்சை, தஞ்சை-திருச்சி பயணிகள் ரயில்கள் செப்., 16,23,30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை-நெல்லை-மயிலாடுதுறைரயில் செப்.,25 முதல் 30 வரையில்திருச்சி-மயிலாடுதுறை வரையில் ரத்து செய்யப்படுகிறது.
நாகூர் -திருச்சி-நாகூர் ரயில் பூதலூர்- திருச்சி இடையே செப்.,25,26-ல் ரத்து செய்யப்படுகிறது. நாகூர் திருச்சி-தஞ்சை ரயில் திருச்சி-தஞ்சை இடையே செப்.,25-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. கோவை மயிலாடுதுறை கோவை இடையேயான ரயில் செப்., 30-ம் தேி திருச்சி-மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்படுகிறது. என தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை