நொய்யலை மீட்க அதிரடி! : 40 ஆண்டு ஆக்கிரமிப்புக்கு, 'இடி'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நொய்யலை மீட்க அதிரடி! : 40 ஆண்டு ஆக்கிரமிப்புக்கு, 'இடி'

Updated : செப் 14, 2017 | Added : செப் 13, 2017 | கருத்துகள் (8)
Advertisement
நொய்யலை மீட்க அதிரடி!  : 40 ஆண்டு ஆக்கிரமிப்புக்கு, 'இடி'

கோவை: கோவை நகரிலுள்ள ஆத்துப்பாலம் அணைமேடு பகுதியில், நொய்யல் நீர்வழித்தடத்தில், 40 ஆண்டுகளாக இருந்த, 638 ஆக்கிரமிப்பு வீடுகள் நேற்று ஒரே நாளில் இடித்து அகற்றப்பட்டன.

கோவை கூடுதுறையில் துவங்கும் நொய்யல் நதி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை கடந்து, ஈரோடு வழியாக, கரூர் மாவட்டம் காவிரியில் கலக்கிறது.


பயோ மெட்ரிக் :


மாவட்டத்தில் மட்டும், 24 குளங்களை நிரப்பிச் செல்கிறது. குளங்களும், நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி விட்டன. முட்புதர் மண்டியிருப்பதோடு, கழிவு நீர் செல்லும் ஓடையாக மாறி விட்டது. பல இடங்களில் வாய்க்கால் சிதிலமடைந்து காணப்படுகிறது. நீர் நிலைகளை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வழித்தடத்தை மீட்பது தொடர்பாக, நமது நாளிதழ் தொடர்ந்து, கட்டுரை வெளியிட்டு வருகிறது.

நீர் நிலையை ஆக்கிரமித்து வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கி, அவற்றை அகற்ற கோர்ட்டும் பல முறை உத்தரவிட்டுள்ளது. இவ்விஷயத்தில் அக்கறை காட்டாமலும், அறிக்கை தாக்கல் செய்யாமலும் உள்ள மாவட்ட கலெக்டர்கள், நேரில் ஆஜராக, சென்னை ஐகோர்ட் உத்தர விட்டது. கோவையில் எங்கெங்கு ஆக்கிரமிப்பு வீடுகள் இருக்கின்றன என, குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர். 121 இடங்களில் குடிசைகள் இருப்பது கணக்கெடுக்கப்பட்டது.மொத்தம், 15 ஆயிரத்து, 717 பயனாளிகள் இருப்பது, 'பயோமெட்ரிக்' முறையில் கண்டறியப்பட்டது.


கனமழை :


இவர்களுக்காக, 12 இடங்களில், 10 ஆயிரத்து, 888 வீடுகள் கட்டப்பட்டன.அணைமேடு, முத்து காலனி, அண்ணா காலனி, ஆசாத் நகரில் வெள்ளலுார் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்து, 40 ஆண்டுகளாக வசித்த, 1,400 குடும்பத்துக்கு, வெள்ளலுார் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது. இதன் பின்பும், வீட்டை காலி செய்ய பலரும் தயங்கினர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதும், பெரும்பாலானோர் காலி செய்தனர். சில நாட்களாக பெய்த கனமழையால், வீட்டுக்குள் தண்ணீர் வருவதற்கான அபாயம் உருவானது. பின், உடனடியாக மற்றவர்களும் வீட்டை விட்டு வெளியேறினர்.


ஒரே நாளில் அகற்றம் :


குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி, பொதுப்பணித்துறை ஆகியவற்றின் அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி நேற்று துவக்கப்பட்டது. 7 பொக்லைன், 10 லாரிகள் ஈடுபடுத்தப்பட்டன.துப்புரவு தொழிலாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், என, 200 பேர் களப்பணி ஆற்றினர். மொத்தம், 638 ஆக்கிரமிப்பு வீடுகள் நேற்று ஒரே நாளில் இடித்து அகற்றப்பட்டன.

வெள்ளலுார் ராஜவாய்க்கால் தடுப்பணையில் இருந்து வரும் நீர்வழிப்பாதை குறுக்கே, அணைமேடு பகுதியில், சித்தி விநாயகர் கோவில், தர்கா ஆகியவையும் அப்பகுதி மக்களின் ஒப்புதலுடன் அகற்றப்பட்டன.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நகர்ப்பகுதியில், 18 இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உள்ளன. முதற்கட்டமாக, 5 இடங்களில், 638 வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன.
இது, துவக்கமே. இதன் தொடர்ச்சியாக, படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நீர் வழிப்பாதை மீட்டெடுக்கப்படும். மீண்டும் ஆக்கிரமிப்பு உருவாகாத வகையில் பாதுகாப்பதோடு, வாய்க்காலை துார்வாரி, சீரமைப்பது பொதுப்பணித்துறை வேலை' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-செப்-201719:56:02 IST Report Abuse
Rahim மக்களின் 638 வீடுகளை இடித்த அடிமைகளின் அரசு இதே கோவை அருகே பல ஆயிரம் ஏக்கர் காட்டையும் அழித்து இதே நொய்யல் ஆற்றில் இருந்து பிரிந்து ஓடி வன விலங்குகள் தாகத்தை போக்கிக்கொண்ட மற்றும் இக்கரை போளுவாம் பட்டி கிராம மக்கள் உபயோகித்த ஓடைகளையும் அழித்து ஜத்குரு ஆக்கிரமித்த பெரும் வனத்தையும் மீட்குமா ? சாமான்ய மக்களுக்கு ஒரு நீதி, சாமியாருக்கு ஒரு நீதியா ?
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
14-செப்-201716:26:57 IST Report Abuse
Mohan Sundarrajarao நாப்பது வருஷ காலம் ஆக்கிரமிப்பு செய்ததற்கு அபராதம் விதிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
14-செப்-201715:32:13 IST Report Abuse
ganapati sb அருமை நொய்யல் தடையின்றி செழித்து ஓடினாலே கோவைக்கு திருப்பூருக்கு நல்லகாலம் பிறந்துவிடும் நொய்யல் பவானி போல காவிரியில் கலப்பதால் தமிழகமும் பயனுறும்
Rate this:
Share this comment
Cancel
NARAYANAN.V - coimbatore,இந்தியா
14-செப்-201713:41:21 IST Report Abuse
NARAYANAN.V சி.எம் .சி .காலனிகளில் இருக்கிற ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
14-செப்-201712:44:25 IST Report Abuse
Kundalakesi ஏன் அரசு ஒரு முள் வேலியோ அல்லது காம்பௌண்ட் செவுரு கட்ட கூடாது?
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
14-செப்-201710:11:08 IST Report Abuse
pattikkaattaan ஆக்கிரமிப்பிற்கு துணைபோவதே அந்தந்த பகுதி அரசியல்வாதிகள்தான்... ஓட்டுக்காக நாட்டை அழிக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
14-செப்-201709:56:20 IST Report Abuse
srisubram இதே போன்று தாம்பரம் முடிச்சூர் , சோழிங்க நல்லூர் ஏரி, வேளச்சேரி ஏரி இங்கெல்லாம் எப்ப பண்ணபோறீங்க ? சாமியாருங்க பின்னால வாலை பிடிக்கிறதுக்கு பதிலா , மிஸ்ஸட் கால் கொடுக்காமல் , இந்த வேலைகளை பாருங்க , ஆறு ஏரி எல்லாம் தானா வந்துவிடும் , நீங்க ஆக்கிரமிப்பை தண்டிக்காததாலே இன்னிக்கி ஆறு , ஏரி எல்லாம் போச்சு .
Rate this:
Share this comment
Cancel
Rangaraj - Coimbatore,இந்தியா
14-செப்-201704:06:25 IST Report Abuse
Rangaraj நகர்புறத்திலுள்ள ஆத்துப்பாலம் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றி என்ன பிரயோஜனம் ஆத்துப்பாலம் பகுதியில் நொய்யல் வெள்ளம். வருமென்றால் ஒருபய அங்கே இருக்கமாட்டான் நொய்யல் ஆரம்ப இடத்திலிருந்து clean பண்ணுங்க அடுத்த பகுதிக்காரன் தண்ணீர். வர்றதே பாத்து தான காலி பண்ணுவான் இல்லேன்னா இப்போ காலி பண்ணினா ஆத்துப்பாலத்துக்கறாங்க மறுபடியும் ஆக்கிரப்பு பண்ண வாய்ப்பிருக்கு செய்ஞ்சா உருப்படியா செய்யுங்க அதவுட்டுட்டு நதியே மீட்டெடுப்போம் விதியெ மீட்டெடுப்போம்ம்னு ஒவ்வொரு சாமியார் பின்னாலே டூர் போகவேண்டியது தான் தும்பே வுட்டுட்டு வாலே புடிச்ச எப்படி அதனாலே நொய்யல் ஆறு ஆரம்பிக்கற இடித்திலிருந்து ஸ்டார்ட் பண்ணுங்க அடுத்தஇடம் ஆட்டமேட்டிக்கா காலியாயிடும் கவர்ன்மெண்டுக்கு காசும் மிச்சம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை