காதலிக்கு வெட்டு: காதலன் தற்கொலை| Dinamalar

காதலிக்கு வெட்டு: காதலன் தற்கொலை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருநெல்வேலி: நெல்லையில், காதலியை அரிவாளால் வெட்டிய, வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநெல்வேலி, கடையத்தை சேர்ந்த கல்பனா, 25; பட்டதாரி. விவசாய வேலைகளுக்கு சென்று வந்தார். கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சரவணன், 27; முதுகலை பட்டதாரி. இருவரும் கல்லுாரியில் படிக்கும் போதே காதலித்தனர். சரவணன் கேரளாவில் சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றினார். இவர்களது திருமணத்திற்கு, சரவணன் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், கல்பனா குடும்பத்தினர் மறுத்தனர்.
நேற்று காலை, வயல் வேலைக்கு சென்ற கல்பனாவை, பின்தொடர்ந்து சென்ற சரவணன், கல்பனாவிடம் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். அவர், 'பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய மாட்டேன்' என, மறுத்தார். இதனால் ஆத்திரமுற்ற சரவணன், கல்பனாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த கல்பனா அம்பாசமுத்திரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.போலீஸ் விசாரணைக்கு பயந்த, சரவணன், வீட்டுக்கு சென்று துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து, ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:56:41 IST Report Abuse
Srinivasan Kannaiya சமூக சீர்கேடு... நாகரீகம் என்ற பெயரில் குலைந்து வரும் குடும்பக் கட்டுப்பாடு... கூட்டு குடும்பங்கள் மறைந்ததின் விளைவுதான் இது..
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-செப்-201704:06:46 IST Report Abuse
Amirthalingam Sinniah படித்த மூடர்கள் வாழ்க்கையையே தொலைத்துவிட்டார்கள் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.