லண்டன் பெண்ணிடம் மோசடி : சாமியாருக்கு போலீஸ் வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லண்டன் பெண்ணிடம் மோசடி : சாமியாருக்கு போலீஸ் வலை

Added : செப் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: திருமணத் தடை நீங்க பூஜை செய்வதாக கூறி, லண்டனில் வசிக்கும் தமிழ் பெண்ணிடம், 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த சாமியாரை, போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த புலியூர்காட்டுசாகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரியா, 24; லண்டனில் பணிபுரிந்து வருகிறார். இவர், 2013ல், தன் பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது, சேத்தியாத்தோப்பு கூட்ரோடு அருகில் உள்ள கருப்பு சாமி கோவிலுக்குச் சென்று, அங்கிருந்த சாமியார் ஆறுமுகத்தை சந்தித்து பேசினார். அப்போது, சாமியார் ஆறுமுகம், ஜெயப்பிரியாவின் குடும்ப சூழல்களையும், திருமணம் நடக்காமல் தள்ளிப் போவது குறித்தும் கூறவே, ஜெயப்பிரியாவிற்கு, சாமியார் மீது நம்பிக்கை ஏற்பட்டது. ஜெயப்பிரியா, லண்டன் சென்றதும், அவரை மொபைல்போனில் தொடர்பு கொண்ட சாமியார் ஆறுமுகம், திருமண தடை நீங்க, சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என தெரிவித்தார். தன் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும்படியும் கூறினார். பல தவணைகளாக, 12 லட்சம் ரூபாய் ஜெயப்பிரியா அனுப்பினார்.
அதன் பிறகும், சாமியார் ஆறுமுகம் தொடர்ந்து போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஜெயப்பிரியா, ஆன்லைனில், எஸ்.பி.,க்கு புகார் செய்தார்.
அதன்படி, சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரித்து சாமியார் ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-செப்-201704:12:11 IST Report Abuse
Amirthalingam Sinniah லண்டனிலும் படித்து, அறியாமையிலிருக்கும் முட்டாள்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை