பெரியாறு அணையில் கூடுதலாக நீர் திறப்பு?| Dinamalar

பெரியாறு அணையில் கூடுதலாக நீர் திறப்பு?

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

முல்லை பெரியாறு அணையில் இருந்து, பாசனத்திற்கு நீர் திறக்க, பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது. கேரள எல்லையில் உள்ள, முல்லை பெரியாறு அணை, 10.5 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அணையில், 7.66 டி.எம்.சி., நீரை மட்டுமே தேக்கி வைக்க முடியும். தென் மேற்கு பருவ மழையால், இந்த அணைக்கு நீர்வரத்து கிடைக்கிறது. 2016ல் பருவ மழை பொய்த்ததால், அணை நிரம்பவில்லை. இந்தாண்டு, பருவ மழையால், ஜூலை முதல் அணைக்கு நீர்வரத்து கிடைத்து வருகிறது. தற்போது, அணையில், 3.36 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அணைக்கான நீர்வரத்து, வினாடிக்கு, 906 கன அடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு, 218 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு அதிகரித்து வரும் நிலையில், அணையில் இருந்து, தமிழகத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, கூடுதல் நீர் திறக்க பொதுப்பணித் துறை முடிவெடுத்துள்ளது. ஓரிரு நாளில், கூடுதல் நீர் திறப்பு நடைமுறைக்கு வரும் என, தெரிகிறது.

- நமது நிருபர் -

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.