பூ விளைச்சல் அமோகம்: புரட்டாசியால் உற்சாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூ விளைச்சல் அமோகம்: புரட்டாசியால் உற்சாகம்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தமிழகத்தில், பூக்கள் சாகுபடி அதிகரித்துள்ளதாலும், புரட்டாசி பிறப்பதாலும், விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். மதுரை, ஈரோடு, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களில், பூக்கள் சாகுபடி அதிகளவு நடக்கிறது. மல்லிகை, சாமந்தி, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம், முல்லை, கோழிக்கொண்டை உள்ளிட்ட, பல்வேறு வகை பூக்கள் உற்பத்தியாகின்றன.
கார்னேசன், ஜெர்பரா உள்ளிட்ட கொய் மலர்களும் உற்பத்தியாகின்றன. இங்கு உற்பத்தியாகும் பூக்கள், சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்று மதியாகின்றன. தற்போது பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளதால், சந்தைக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால், விலையும் வீழ்ச்சியடைந்து வருகிறது.மல்லிகை, முல்லை உள்ளிட்டவை, கிலோ, 100 ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன. சாமந்தி, சம்பங்கி, கனகாம்பரம் உள்ளிட்டவை, கிலோ, 40 - 60 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. விரைவில், புரட்டாசி பிறப்பதால், பூக்களின் தேவை அதிகரிக்கும். உரிய விலை கிடைக்கும் என்பதால், பூ விவசாயிகளும், வியாபாரிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை