'ஆதார்' தகவல்கள் திருடப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆதார்' தகவல்கள் திருடப்படுமா?

Added : செப் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

'ஆதார்' தகவல்களை, மொபைல் போன் எண்ணுடன் இணைத்த பின், அவற்றை தொலை தொடர்பு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்; இல்லையெனில், அது, கிரிமினல் குற்றமாக கருதப்படும் என, கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள், தேச விரோதிகள், 'சிம் கார்டு' பயன்படுத்துவதை தவிர்க்க, மொபைல் போன் உபயோகிப்பாளர்கள், தங்கள் எண்ணுடன், ஆதார் எண்ணை, 2018 பிப்ரவரிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, அனைத்து தொலைபேசி நிறுவனங்களும், தங்கள் கிளையிலோ அல்லது முகவர்களிடமோ, வாடிக்கையாளரின் கைவிரல் ரேகை பதிவை பெறுவதற்காக, 'பயோ மெட்ரிக்' கருவியை தந்துள்ளன.
அதன் வாயிலாக, வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். இதனால், பொதுமக்களுக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, ஆதார் அட்டை வழங்கும், யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், தனித்துவ அடையாள எண் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: 'பயோ மெட்ரிக்' விபரங்களை பெறும், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், அதை உடனுக்குடன், 'என்கிரிப்ட்' என்ற, சங்கேத மொழிக்கு மாற்றி, எங்களுக்கு அனுப்பி வைத்து விடுகின்றன. மாறாக, தகவல்களை சேமித்து வைத்தால், ஆதார் சட்டப்படி, அது கிரிமினல் குற்றமாகும்; மூன்றாண்டு வரை தண்டனை கிடைக்கும். எனவே, பயம் தேவையில்லை; தகவல்கள் திருடப்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
14-செப்-201713:47:11 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy An unnecessary issue is highlighted just because the UPA Government is in power. Aadhar was introduced when UPA was in power. No one objected to it , including people who are crying for privacy concerns now Secondly no objects when your bio metrics and address details are taken for pass port and this information is available globally in all immigration counters of all nations including Pakistan and China. Not only taht, when you apply for Visa you are supposed to give your bank statement of past three months. This info is available with the country you are visiting. If you buy items from any mall or supermarket , you leave your Mobile Numbers for getting promotional information of their products. You are not bothered about privacy concerns in these cases. You buy anything through Amazon , your buying preferences, etc are bombarded to you when you surf the internet. No one is really asking what is that critical data that can be stolen through Aadhar database which is infringing on privacy?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை