சிறு தானிய சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்: தமிழகத்தில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு| Dinamalar

சிறு தானிய சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்: தமிழகத்தில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சிறு தானிய சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால், உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழகத்தில், கேழ்வரகு, கம்பு, தினை, சாமை, மக்காச்சோளம், குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானியங்கள், 18 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும், 25 லட்சம் டன் சிறு தானியம் உற்பத்தியாகிறது. தற்போது, ஊட்டச்சத்து நிறைந்த, சிறு தானிய உணவு குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சிறு தானியங்களின் தேவை அதிகரித்து உள்ளது. போதுமான உற்பத்தி இல்லாததால், விலை கூடுதலாக உள்ளது. இதையடுத்து, சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை, வேளாண் துறை தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், சிறு தானிய சாகுபடி அதிகரிக்க துவங்கி உள்ளது. மற்ற பயிர்களுக்கு மாற்றாக, சிறு தானிய சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், சிறு தானிய உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

இது குறித்து, வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிறு தானிய உற்பத்தியை அதிகரிப்பதற்காக சான்றுஅளிக்கப்பட்ட விதைகள், வீரிய ஒட்டு ரக செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இதற்காக, சிறு தானியங்களுக்கான தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, செயல்படுத்தி வருகின்றன. கடந்தாண்டு இத்திட்டத்திற்கு, 8.22 கோடி ரூபாய் செலவிடப்பட்டது; இந்தாண்டும் செலவிடப்பட உள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 2016ல், 2.69 கோடி ரூபாய் செலவிடப்பட்டது; இந்தாண்டு, நான்கு கோடி ரூபாய் செலவிடப்படஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.