'டிமிக்கி' ஆசிரியர்களுக்கு கடிவாளம்: அமலுக்கு வருகிறது டிஜிட்டல் பதிவு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'டிமிக்கி' ஆசிரியர்களுக்கு கடிவாளம் :
அமலுக்கு வருகிறது டிஜிட்டல் பதிவு

அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கு வராமல், பாடம் நடத்தாமல், சம்பளம் வாங்குவதை தடுக்க, 'டிஜிட்டல்' விபர பதிவு அமலுக்கு வருகிறது.

ஆசிரியர்கள் ,Teachers,  அரசு பள்ளி, Government School, தமிழக அரசு,Tamilnadu Government,   பள்ளிக்கல்வித் துறை, School of Education, டிஜிட்டல் எஸ்.ஆர்,Digital SR, கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், Educational Research Institute,

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், நான்கு லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அரசு சம்பளத்தில், ஒரு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

ஒழுங்கு நடவடிக்கை :


இவர்களுக்கு, தினசரி வருகைப் பதிவு, செயல் திறன், பணிமூப்பு, கல்வித் தகுதி, நடத்தை போன்றவற்றை கணக்கிட்டு, சலுகைகளும், விருதுகளும் வழங்கபடுகின்றன.இதில், பெரும்பாலான ஆசிரியர்கள், பள்ளிக்கு ஒழுங்காக வராமல் இருந்தாலும், பதிவேட்டில் வந்ததாக குறிப்பிடுவர்.

சில ஆசிரியர்கள், பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் போது, தங்கள் மீதான புகார், ஒழுங்கு நடவடிக்கை விவகாரங்களை

மறைத்து விடுகின்றனர். இந்த தில்லுமுல்லுகளை தடுக்கும் வகையில், ஆசிரியர்களின் வருகைப் பதிவு மற்றும் பணி விபரங்களை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஆசிரியர்களின் பணி பதிவேடு, டிஜிட்டல் எஸ்.ஆர்., எனப்படும், கணினி ஆவணமாக மாற்றப்படுகிறது.

மறைக்க முடியாது :


இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ஆசிரியர்களின் பணி அனுபவம், முகவரி, வருமான வரி, கல்வித் தகுதி, 'மெமோ' மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விபரங்களை, தனித்தனியாக பதிவு செய்ய உள்ளோம். ஒரு ஆசிரியரின் பெயரை பதிவு செய்தால், அவரை பற்றிய விபரங்களை, பள்ளி அலுவலகம், மாவட்ட அதிகாரி அலுவலகம், இயக்குனரகம் மற்றும் செயலகம் என, அனைத்து இடங்களிலும் தெரிந்து கொள்ளலாம். எந்த ஆசிரியரும், பள்ளிக்கு வராமல் ஏமாற்ற முடியாது; எந்த விபரங்களையும் மறைக்க முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'வெட்டி' ஆசிரியர்களை இடம் மாற்ற முடிவு


மாணவர் சேர்க்கை இல்லாத,ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்களை, இடமாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் செயல் படுகின்றன.
இவற்றில், 42 அரசு உதவிபெறும் நிறுவனங்கள் உள்ளன; அவற்றில், ஒன்பது நிறுவனங்கள்

Advertisement

மூடப்பட்டு உள்ளன. மற்ற நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளதால், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வேலை இல்லை; அதனால், பல மாதங்களாக, சம்பளம் வழங்கபடவில்லை. இந்நிலையில், ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மாணவர் சேர்க்கை இல்லாத போதிலும், அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

உதவிபெறும் சிறுபான்மை ஆசிரியர் கல்வி நிறுவனங்கள், சும்மா இருக்கும் ஆசிரியர்களை, அவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மாற்ற, பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.சிறுபான்மை அந்தஸ்து பெறாத நிறுவன ஆசிரியர்களை, அரசு பள்ளிகள் அல்லது மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ
14-செப்-201720:45:16 IST Report Abuse

Rathinasami Kittapaவரவேற்க வேண்டிய முறை. அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதைத் தடுக்கவேண்டி கேமரா வைத்தனர். பல இடங்களில் கேமரா வேலை செய்யதவாறு செய்துள்ளனர். லஞ்சமும் வழக்கப்படி, 'மாமூலாக' நடக்கிறது. முதலில் நாம் திருந்த வேண்டும்

Rate this:
DR TE PARTHASARATHY - chennai,இந்தியா
14-செப்-201717:51:07 IST Report Abuse

DR TE PARTHASARATHYஆசிரியர்கள் பற்றி குறை கூறுபவர்கள் மற்ற சமுதாயம் எவ்வாறு உள்ளது என்பதை யோசனை செய்து பேசவும்.கடந்த 60 ஆண்டுகளில் ஆசிரியர் சம்பளம் மிக குறைந்த அளவே அதிகரித்து உள்ளது.பணிக்கு சரியாக வராமை பொறுப்பாக செயல்படாமை ஆகியவற்றை நிர்வாகம் சரி செய்ய முற்பட்டால் பலவேறு குறுக்கீடுகள் புகார்கள் இவைகளால் நிர்வாகம் செயலின்றி உள்ளது.பாதிப்புக்கு உள்ளாவது மாணவர்கள் கல்வி தரம்.நாட்டின் எதிர் காலம்.

Rate this:
Muruganandam - Madras,இந்தியா
14-செப்-201713:29:11 IST Report Abuse

Muruganandamராஜபாளையம் Union ல் எனக்கு தெரிந்து நிறைய ஆசிரியர்கள் "Teachers Union" நிர்வாகிகள் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு, கல்வி அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு பள்ளிக்கே செல்வதில்லை. இவர்களை நம்பி பள்ளிக்கு வரும் மாணவர்களின் நிலை பரிதாபம். இந்த ஆசிரியர்கள் பள்ளி நேரத்தில் சொந்த வேலையை பார்க்க "attendance " கை எழுத்து போட்டுவிட்டு வெளியே சென்றுவிக்கின்றனர். இவர்களுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து மாதம் ரூ 70000 , ரூ 80000சம்பளம் கொடுக்கப்படுகிறது . யார் இவர்களை கேள்வி கேட்கமுடியும் ? ஓட்டு அரசியலாகிவிட்டதே "உடையவன் இல்லாத வேலை ஒரு முழம் கட்டைதான் " என்று கிராமத்து முதுமொழி ஒன்று உண்டு. "Ownership " இல்லாத நாட்டு நிர்வாகம் இப்படித்தான் சீர்கெட்டு இருக்கும்

Rate this:
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
14-செப்-201712:43:38 IST Report Abuse

Naam thamilarஎன்ன கடிவாளம் ? இந்த பயோமெட்ரிக் மெஷின்இல் கைரேகை பதில் பின் நும்பெறும் யூஸ் பண்ணலாம். அந்த நம்பரை தன்னோடு வேலை செய்பவரிடம்,( நண்பர்கள்) கொடுத்தால் முடிந்து போச்சு. அவர் வேலைக்கு வராவிட்டாலும் அவரது நண்பர்கள் காலையிலும் மாலையிலும் நம்பர் அடித்து விடுவார்கள். வெறும் பயோ மெட்ரிக் மெஷின் வைத்து ஒன்றும் கடிவாளம் போடா முடியாது. வேலை செய்பவர்கள் அவர்கள் மனசாட்சி படி நடந்தால் தான் இது எல்லாம் ஒர்க் அவுட் ஆகும்.

Rate this:
karthikeyan - singapore,சிங்கப்பூர்
14-செப்-201711:12:39 IST Report Abuse

karthikeyanவரவேற்கப்படவேண்டிய திட்டம் அனைத்து அரசு மற்றும் தனியார் இடத்திலும் இந்த திட்டம் செயல்படுவது நல்லது . ஏமாற்ற முடியாது .

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
14-செப்-201710:54:45 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)அய்யகோ சமூக நீதிக்கு ஆபத்து , இது பா ஜ கவின் சதி திட்டம் ன்னு சொல்லி பரப்புரை செய்வாங்க. அரசாங்கம் துணிச்சலாக இதை செய்ய வேண்டும் ஆசிரியர் மட்டும் அல்ல எல்லா அரசு ஊழியர்க்கும் இதைக் கொண்டுவரவேண்டும். மத்திய அரசில் , தெற்கு நிர்வாக அலுவலகத்தில் இந்த முறை முன்பே வந்துவிட்டது . ப சிதம்பரம் காலத்தில் திட்டம் கொண்டு வரப்பட்டு மோடி காலத்தில் நன்றாக அமல்படுத்தப்பட்டுள்ளது

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:45:25 IST Report Abuse

Srinivasan Kannaiyaவந்தாலும் வரவில்லை என்றாலும் பதிவாகும் படி செய்ய வழிகள் உண்டா...

Rate this:
Saravana kumar - Coimbatore,இந்தியா
14-செப்-201709:17:22 IST Report Abuse

Saravana kumarநல்ல திட்டம், திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Rate this:
Thennavan - San francisco,யூ.எஸ்.ஏ
14-செப்-201708:59:40 IST Report Abuse

Thennavanபயோமெட்ரிக்ஸ் முறையை அரசு தவறாக பயன்படுத்துகிறது. பயோமெட்ரிக்ஸ் ஒவ்வுவுறு மனிதனுக்கும் வெவேறு. இந்த முறை கைதிகளுக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Rate this:
Musthafa - Cuddalore,இந்தியா
14-செப்-201708:29:15 IST Report Abuse

Musthafaநல்ல யோசனை வரவேற்க தக்கது துரிதமாக செயல் படுத்த வேண்டும் மேலும் இது அனைத்து அரசு அலுவலகங்களிலும் வரவேண்டும்

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement