இதே நாளில் அன்று| Dinamalar

இதே நாளில் அன்று

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
  இதே நாளில் அன்று

1923 செப்டம்பர் 14

முன்னணி வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி, பாகிஸ்தான், சிந்து மாநிலம், சிக்கார்பூரில், 1923 செப்.,14ல் பிறந்தார். சட்டப் படிப்பை முடித்த அவர், வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலுக்குள் நுழைந்த அவர், பா.ஜ., சார்பில், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், ஆறாவது மற்றும் ஏழாவது லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.,யானார். வாஜ்பாய் அமைச்சரவையில், சட்டம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அமைச்சராக பணியாற்றியவர்.
பா.ஜ., வை விட்டு விலகிய அவர், 2004 பொதுத் தேர்தலில், வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2010ல் மீண்டும், பா.ஜ.,வில் இணைந்த இவர், ராஜ்ய சபா, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்திய வழக்கறிஞர்களிலேயே மிகக்கூடுதலான ஊதியம் பெறுபவராக கூறப்படுபவர். பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளில் ஆஜராகி, கடும் விமர்சனங்களுக்கும் ஆளானவர். அவர் பிறந்த தினம், இன்று.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.