தெலுங்கானா பள்ளிகளில் தெலுங்கு கட்டாய பாடம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தெலுங்கானா பள்ளிகளில் தெலுங்கு கட்டாய பாடம்

Added : செப் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஐதராபாத்: 'தெலுங்கானா மாநிலத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 1 - 12ம் வகுப்பு வரை, தெலுங்கு மொழி, கட்டாய பாடமாககற்பிக்கப்படும்' என, மாநில அரசு அறிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர், சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 1 - 12ம் வகுப்பு வரை, தெலுங்கு மொழியை கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டும். தெலுங்கு மொழியை, கட்டாய பாடமாக கற்பிக்கின்ற கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, அனுமதியும், அங்கீகாரமும் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், 'தெலுங்கானா மாநிலத்தில் உள்ள, அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களும், தங்கள் பெயர் பலகையில்கட்டாயம் தெலுங்கு மொழியில் எழுத வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:51:46 IST Report Abuse
Srinivasan Kannaiya தமிழ் நாட்டில் ....?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை