வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறிய வேன் ஓட்டுனர்| Dinamalar

வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறிய வேன் ஓட்டுனர்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், வெளிநாட்டுப் பெண்ணிடம், வேன் ஓட்டுனர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றான். அவனிடம் இருந்து தப்பிய பெண், போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மாமல்லபுரம், ஒற்றைவாடை குறுக்குத் தெருவில், இவ்வூரைச் சேர்ந்தவர், உணவகம் நடத்துகிறார். மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த, பின்லாந்து நாட்டு பெண்ணுடன் அவருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதால், ஓராண்டிற்கு முன் அவரை திருமணம் செய்தார்.
அந்தப் பெண், அவ்வப்போது சொந்த நாட்டிலிருந்து, சுற்றுலா, 'விசா' அனுமதியில், மாமல்லபுரம் வந்து, கணவருடன் சில மாதங்கள் தங்கி, மீண்டும் சொந்த நாடு திரும்புவார் என, கூறப்படுகிறது. தற்போது இங்கு வந்துள்ள அவர், 8ம் தேதி, நாய்களுக்கு, மருந்து வாங்குவதற்காக, கேளம்பாக்கம் சென்று, இரவு, வாடகை வேனில், மாமல்லபுரம் திரும்பிஉள்ளார். மற்ற பயணியர் இறங்க, இரவு, 9:30 மணியளவில் வேனில், பின்லாந்து நாட்டு பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார்.அப்போது அந்த வேன் ஓட்டுனர், 'மாமல்லபுரத்திற்கு வேன் செல்லாது; இறங்கி கொள்ளுங்க' என, கூறியதால், கணவரிடம், அங்கு வருமாறு வெளிநாட்டு பெண் போனில் அழைத்துள்ளார்.இதற்கிடையே, வேன் ஓட்டுனர், மாமல்லபுரத்தில் அவரை இறக்கி விடுவதாக கூறி, புறவழிச்சாலை வழியே வேனில் அழைத்துச் சென்றுள்ளான்.
சிறிது துாரம் சென்றதும், வேன் பழுதாகி விட்டதாக கூறி நிறுத்தி, அந்த பெண்ணை நெருங்கி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளான். அவனை எதிர்த்து போராடி, காயங்களுடன் தப்பித்த அந்த பெண், மாமல்லபுரம் வந்து, கணவரிடம் இது பற்றி தெரிவித்தார். இருவரும் மாமல்லபுரம் போலீசில், புகார் அளித்தனர். வேன் ஓட்டுனர் பெயர், முகவரி தெரியாததால், திருப்போரூர், கேளம்பாக்கம் சுற்றுப்புற பகுதிகளில், வேன் ஓட்டுவோரை பிடித்து, போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.சில மாதங்களுக்கு முன், ஜெர்மனி நாட்டு பெண்ணை, மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிபுலம் கடற்கரையில், சிலர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அந்த குற்றவாளிகள் இன்னும் பிடிபடாத நிலையில்,வெளிநாட்டு பெண்ணிடம் மீண்டும் அத்துமீறல் நடந்துள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-செப்-201704:31:32 IST Report Abuse
Amirthalingam Sinniah வாடகைக்கு அமர்த்தும் வாகனங்களின் இலக்கத்தையும், சாரதியின் பெயரையும் முன் கண்ணாடியில் பெரிதாக அச்சிடவேண்டும். சுற்றுலா பயணிகளை பாலியல் குற்றங்களுக்கு உட்படுத்த முயலும் காம பிசாசுகளை அடையாளம் காண உதவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.