நாளை இந்திய-ஜப்பான் உச்சி மாநாடு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாளை இந்திய-ஜப்பான் உச்சி மாநாடு

Updated : செப் 13, 2017 | Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஆமதாபாத்: இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இவரது மனைவி ஆகியோர் குஜராத் சென்று அங்கு பல்வேறு முக்கிய இடங்களை பார்வையிட்டனர். அவர்களுடன் பிரதமர் மோடியும் உடன் சென்றார்.

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே , இன்று குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்தார். அவரை விமான நிலையத்தில் வரவேற்றார் பிரதமர் மோடி. பின்னர் ஆமதாபாத் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற சிதி சையீத் என்ற 16-ம் நூற்றாண்டு பழமையான மசூதி ஒன்றிற்கு ஷின்சோ அபே அவரது மனைவி , மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சென்றனர். தொடர்ந்து சபர்மதி ஆசிரமம் சென்ற அபே பார்வையாளர்கள் வருகை பதிவேட்டில் ஜப்பானிய மொழியில் கையெழுத்திட்டார்.

நாளை இந்திய-ஜப்பானிய 12-வது உச்சி மாநாடுய நடக்கிறது. பின்னர் இருநாடுகளிடையே வர்த்தகம், உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அபே வருகையின் முக்கிய நிகழ்வாக இந்தியாவில் ஜப்பான் நிதியுதவியுடன் முதன்முறையாக புல்லட் ரயில் திட்டம் துவக்கப்பட உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை