2,000 டாக்டர்கள் உ.பி.,யில் நியமனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

2,000 டாக்டர்கள் உ.பி.,யில் நியமனம்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, புதிதாக, 2,065 டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கோரக்பூர் மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது.
மாநிலத்தில் மருத்துவ சேவை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர், சித்தார்த் நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை:
உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவமனைகளில், 7,326 டாக்டர் பணியிடங்கள் நீண்டகாலமாகவே காலியாக உள்ளன. உ.பி., மாநில தேர்வாணையம் மூலம் இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக, 2,065 பணியிடங்களுக்கு டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் நியமனம் செய்யப்படுவர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை