டில்லி பல்கலை., மாணவர் தேர்தல் : தலைவர் பதவியை கைப்பற்றியது காங்., | Dinamalar

டில்லி பல்கலை., மாணவர் தேர்தல் : தலைவர் பதவியை கைப்பற்றியது காங்.,

Added : செப் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை, காங்கிரஸ் மாணவர் அமைப்பும், செயலர் மற்றும் இணைச் செயலர் பதவிகளை, பா.ஜ., மாணவர் அமைப்பும் கைப்பற்றின.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லி பல்கலைக்கழக, மாணவர் சங்க தலைவர், துணைத்தலைவர், செயலர், இணைச் செயலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல், சமீபத்தில் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, காங்., மாணவர் அமைப்பான, இந்திய தேசிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ராக்கி துஷீத், ௧,௫௯௦ ஓட்டு வித்தியாசத்தில், பா.ஜ., மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி., எனப்படும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்த, ரஜத் சவுத்ரியை தோற்கடித்தார்.

துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, காங்., மாணவர் அமைப்பைச் சேர்ந்த, ஷெஹ்ராவத், வெற்றி பெற்றார். செயலர் பதவிக்கான தேர்தலில், ஏ.பி.வி.பி.,யின் மஹாமேதா வெற்றி பெற்றார். இணைச் செயலர் பதவிக்கு போட்டியிட்ட, ஏ.பி.வி.பி.,யின், உமா சங்கர் வெற்றி பெற்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:50:26 IST Report Abuse
Srinivasan Kannaiya டில்லியையே காங்கிரஸ் கைப்பற்றிவிட்டது...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை