புயல் பாதித்த பகுதியில் 170 இந்தியர்கள் மீட்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புயல் பாதித்த பகுதியில் 170 இந்தியர்கள் மீட்பு

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: புயல் பாதிப்புக்குள்ளான, கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான, சின்ட் மார்ட்டினில் இருந்து, 170 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில், சமீபத்தில் வீசிய இர்மா புயல், அதன் அருகே உள்ள பல நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக, கரீபியன் தீவுகளில், புயல் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இந்த தீவுகளில், நிலைமை இன்னும் சீரடையாததால், மீட்பு பணிகள் தீவிர கதியில் நடக்கின்றன.
இந்நிலையில், நெதர்லாந்து ஆளுகைக்கு உட்பட்ட, கரீபியன் தீவு நாடான, சின்ட் மார்ட்டினில், சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில், வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
முதல்கட்டமாக, அங்கிருந்த, 110 பேர் மீட்கப்பட்டதாக, வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மேலும், 60 பேர், புயல் பாதிப்பு பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
சின்ட் மார்ட்டினிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரையும், விமானம் மூலம், இந்தியா அழைத்து வருவதற்கான, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை