'சக்மா, ஹஜோங்' அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'சக்மா, ஹஜோங்' அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடிவு

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: கிழக்கு பாகிஸ்தானிலிருந்து, 50 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தஞ்சமடைந்த, 'சக்மா, ஹஜோங்' அகதிகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போதுள்ள வங்கதேச நாடு, 1947-71 வரை, கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது. கிழக்கு பாகிஸ்தானில், சிட்டகாங் மலைப்பகுதியில் வசித்து வந்தவர்கள் சக்மா மற்றும் ஹஜோங் இன மக்கள். பாகிஸ்தான் அரசால், சொல்ல முடியாத துன்பம் மற்றும் சித்ரவதைக்கு உள்ளான சக்மா, ஹஜோங் இனங்களை சேர்ந்த, 5,000 பேர், 1967ல், அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர்.
இவர்கள், அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது, இவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்துக்கும் அதிகமாகி விட்டது. ஆனால், இவர்களுக்கு இதுவரை, குடியுரிமை வழங்கப்படவில்லை. இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மட்டும், மாநில அரசு செய்து கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், 'சக்மா, ஹஜோங் அகதிகளுக்கு, குடியுரிமை வழங்க வேண்டும்' எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சக்மா, ஹஜோங் அகதிகளுக்கு, குடியுரிமை வழங்க உத்தரவிட்டது. இதற்கு, அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த அமைப்புகள், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், உயர் மட்ட குழு கூட்டம், நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், சக்மா, ஹஜோங் அகதிகளுக்கு, இந்திய குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனாலும், 'அவர்களுக்கு நில உரிமை வழங்கப்பட மாட்டாது; பயணம் செய்வதற்கும், வேலை செய்வதற்கான அனுமதி மட்டும் வழங்கப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை