மூத்த மகன் மீதும் வழக்கு : லாலுவுக்கு மேலும் சிக்கல்| Dinamalar

மூத்த மகன் மீதும் வழக்கு : லாலுவுக்கு மேலும் சிக்கல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பாட்னா: தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், சொத்து விபரங்களை மறைத்ததாக, லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன், தேஜ் பிரதாப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வே துறை ஓட்டல்களை குத்தகைக்கு வழங்கியதில், லஞ்சம் பெற்றதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், லாலுவின் மனைவி ரப்ரி தேவி, மகளும், எம்.பி.,யுமான, மிசா பார்தி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கில், லாலுவின் இளைய மகனும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், பீஹார் முன்னாள் அமைச்சருமான, தேஜ் பிரதாப் யாதவ், 2015 சட்டசபை தேர்தலின்போது, வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், சொத்து விபரங்களை மறைத்ததற்காக, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பா.ஜ.வைச் சேர்ந்த, எம்.எல்.சி.,யான, சுராஜ் நந்தன் பிரசாத், பாட்னா முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.