எம்.ஜி.ஆர்., உருவ நாணயம்: பிரதமருக்கு முதல்வர் நன்றி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., உருவ நாணயம்: பிரதமருக்கு முதல்வர் நன்றி

Added : செப் 13, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எம்.ஜி.ஆர்., உருவ நாணயம்: பிரதமருக்கு முதல்வர் நன்றி

சென்னை: எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிட உத்தரவிட்ட பிரதமருக்கு, முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: மறைந்த தமிழக முதல்வர், எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழா, இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிட வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்று, மத்திய அரசு, எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த, 100 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயம் வெளியிட, அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக, தமிழக மக்கள் சார்பிலும், என் சார்பிலும், தங்களுக்கு இதயப்பூர்வமான நன்றி.இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:46:50 IST Report Abuse
Srinivasan Kannaiya எம்.ஜி.ஆர்., உருவ நாணயம்: பிரதமருக்கு முதல்வர் நன்றி இதற்க்கு நன்றியா... அல்லது பன்னீரை உம்முடன் சேர்த்ததற்கு நன்றியா...
Rate this:
Share this comment
Cancel
Kalyani S - Ranipet,இந்தியா
14-செப்-201709:01:47 IST Report Abuse
Kalyani S 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகள் தமிழகத்தை நாசப்படுத்திவிட்டன என்று கூறும் தமிழிசைகளே, ராஜாக்களே நாசப்படுத்தியதற்கான வெகுமதியை பார்த்தீரா? மத்திய அரசே நாணயம் வெளியிடுகிறது. இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் இன்னும் திராவிட கட்சிகளுக்கே வாக்களிக்கிறோம் என்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை