'தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.1,600 கோடியை தாண்டும்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.1,600 கோடியை தாண்டும்'

Added : செப் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

'தீபாவளிக்கான பட்டாசு விற்பனை, 1,600 கோடி ரூபாயை தாண்டும்' என, பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 800-க்கும் அதிகமான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இத்தொழில், நேரடியாக, இரண்டு லட்சம்; மறைமுகமாக, மூன்று லட்சம் பேர் என, ஐந்து லட்சம் பேருக்கு வாழ்வதாரமாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், சிவகாசியில் இருந்து தான், தீபாவளி மற்றும் தசரா போன்ற பண்டிகைக்கு, பட்டாசுகள் அனுப்பப்படுகின்றன. இந்த ஆண்டு, தீபாவளி பண்டிகை, அக்., 18ல் கொண்டாடப்படுகிறது. இம்மாத இறுதியில், தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், பட்டாசு விற்பனை வேகம் எடுத்துள்ளது. அதே நேரம், லாபம் வெகுவாக குறையும் என, வியாபாரிகள் கூறுகின்றனர்.

இது குறித்து, இந்திய பட்டாசு உற்பத்தியாளர் சங்க அமைப்பாளர், கண்ணன் கூறியதாவது:
பட்டாசுக்கு, 'வாட்' வரி விதிப்பில், வெளி மாநிலங்களுக்கு அனுப்பும்போது, 2 சதவீதமும்; மாநிலங்களுக்குள்ளான விற்பனைக்கு, 14 சதவீத வரியும் இருந்தது. தற்போது, ஜி.எஸ்.டி.,யில், 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. 10 லட்சம் ரூபாய்க்கு சரக்கு விற்றால், 2.8 லட்சம் ரூபாய் வரி கட்ட வேண்டும். இந்த தொழிலில், ஆட்களை நியமித்து, ஊதியம் தரவேண்டும். அதில், உள்ளீட்டு வரியை கழிக்க முடியாது. தீபாவளி, தசரா நெருங்கி விட்டதால், வட மாநிலத்திற்கான பட்டாசு விற்பனை வேகமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசு வர்த்தகம், 1,600 கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கிறோம். எனினும், முன்பை விட லாபம், 30 சதவீதம் குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

விலை உயரும் : 'ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், பட்டாசு மூலப்பொருள் உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கு, வரி விதிப்பு அதிகரித்துள்ளது. 'அதனால், உற்பத்தி செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், பட்டாசு விலை, 20 சதவீதம் வரை உயரும்' என, பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறினர்.

-- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-செப்-201704:40:29 IST Report Abuse
Amirthalingam Sinniah அசுரனை கொன்ற நாளில் , படடாசு செய்யும் தொழிலாளிகளின் உயிரையும் சேர்த்து. எடுத்து கொள்கிறது இந்த படடாசுகள். முறையான உரிமம். இன்றி இயங்கும் தொழில்சாலைகளை மூடுங்கள். கடந்த. வருடம் படடாசு விபத்தால் எவ்வளவோ மக்கள் இறந்து போயுள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை