கள்ளுக்கு தடை நீக்க முதல்வருக்கு மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளுக்கு தடை நீக்க முதல்வருக்கு மனு

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: 'கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்' என, தமிழ்நாடு கள் இயக்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, முதல்வர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு: கள், தடை செய்யப்பட வேண்டிய போதை பொருளோ, மதுவோ அல்ல; அது, ஓர் உணவு. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், புளித்த கள்ளையும், புளிக்காத கள்ளையும், உணவு பட்டியலில் வைத்துள்ளது. கள் இறக்குவதும், பருகுவதும், அரசியலமைப்பு சட்டம், மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. பீஹார் மற்றும் கேரளாவில், மதுவிலக்கு கொண்டு வரப்பட்ட போது, கள்ளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் மட்டும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கள்ளுக்கு தடை உள்ளது; இந்த தடையை, அரசு நீக்க வேண்டும். மக்களுக்கு சத்தான உணவு கிடைப்பதுடன், ஏற்றுமதி மூலம் அரசுக்கு, பெருமளவில் அன்னிய செலாவணி கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை