உள்ளாட்சி மேம்பாடு திட்டம்: ரூ.631 கோடி விடுவிப்பு| Dinamalar

உள்ளாட்சி மேம்பாடு திட்டம்: ரூ.631 கோடி விடுவிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கான அடிப்படை நிதியாக, 631 கோடி ரூபாயை, மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள் என, மொத்தம், 664 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றுக்கு, வரி வசூல் வாயிலாக குறிப்பிட்ட அளவு நிதி கிடைக்கிறது. இருப்பினும், மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாயில் இருந்து, குறிப்பிட்ட அளவு நிதி, உள்ளாட்சிகளுக்கு வழங்கும் நடைமுறை உள்ளது. மாநில நிதிக்குழு பரிந்துரைப்படி, இந்த நிதி, இறுதி செய்யப்படும். இவ்வகையில், தற்போது தமிழகத்துக்கு, 2017 - 18க்கான பங்காக, 631 கோடி ரூபாயை விடுவிக்க, மத்திய நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில், 'தமிழக அரசு, மாநில நிதிக்குழு அளித்துள்ள வழிமுறைப்படி, இந்நிதி உள்ளாட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். இத்தகைய வழிமுறை இல்லாவிட்டால், 2011 மக்கள் தொகை அடிப்படையில், பகிர்ந்து அளிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.