'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்

Added : செப் 13, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சென்னை: ''ஆட்சியில் அமர்வதற்காக, தி.மு.க., போராட்டம் நடத்தவில்லை; மாணவர்களின் நலனுக்காகவே நடத்துகிறது,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் பேசினார்.
'நீட்' தேர்வுக்கு, நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி, தமிழகம் முழுவதும், தி.மு.க., உட்பட, சில அரசியல் கட்சிகள் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை, தாம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., செயல் தலைவர்ஸ்டாலின் பேசியதாவது: 'நீட்' தேர்வால், அனிதா தற்கொலை செய்து கொண்டாலும், அது கொலையே. தி.மு.க., நடத்தும் போராட்டம் அரசியலுக்காக அல்ல. ஆட்சியில் அமர்வதற்காகவும் நடத்தப்படவில்லை. மாணவரின் நலனுக்காக, இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இது போன்ற போராட்டங்கள் நடந்தும், மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., மகளிர் அணி மாநில செயலர், கனிமொழி எம்.பி.,பேசுகையில், ''நீட் தேர்வால், மாணவர்களுக்கு ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., ஆட்சி ஏற்பட்டதும், நீட் தேர்வை ஓட ஓட விரட்டுவோம். தமிழகத்தில் விரைவில் புதிய விடியல் பிறக்கும்,'' என்றார்.
இதேபோல, தமிழகம்முழுவதும், பல்வேறு இடங்களில், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-செப்-201717:16:27 IST Report Abuse
Thiagarajan Kodandaraman Please understand Opp Partys. DMK not give More seats for Coming ELECTION. Near 200 seats They May be HOLD. this Allince only AARPATTAM , PERANI Manitha Sangili.
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
14-செப்-201715:11:47 IST Report Abuse
Sundaram நீட்டிற்க்கான ஒப்புதல் அளித்தது உங்கள் ஆட்சியில் தான் சுடலின் ..
Rate this:
Share this comment
Cancel
Jeeva - virudhunagar,இந்தியா
14-செப்-201715:10:42 IST Report Abuse
Jeeva இவரே நீட் தேர்வை கொண்டு வருவார்களாம் எப்போ இவரே அதா எதிர்த்து போராட்டம் பண்ணுவாராம் .
Rate this:
Share this comment
Cancel
shekaran - thiruchi,இந்தியா
14-செப்-201715:08:21 IST Report Abuse
shekaran இது வெறும் கண் துடைப்பு..இதற்கு முக்கிய புள்ளியே திமுக தான்
Rate this:
Share this comment
Cancel
Nagarajan Thamotharan - Panagudi, Tirunelveli,இந்தியா
14-செப்-201712:41:46 IST Report Abuse
Nagarajan Thamotharan தமிழக பாரதிய ஜனதா பார்ட்டி NEET , NAVYOTHAYA சர்ச்சையை விட்டு விட்டு கிராமங்கள் தோறும் நிலவும் பராமரிப்பற்ற குடிநீர் மற்றும் தரமற்ற சாலைவசதி மற்றும் கட்டிடங்கள், நில ஆக்கிரமிப்பு போன்றவற்றிற்கு போராட முன்வரவேண்டும். திருட்டு திராவிட கழகங்கள் உண்மைக்கு மாறான செய்திகளை ஊடகங்கள் மூலமாக பட்டி தொட்டியெல்லாம் பரப்பிவருவதை வீதி இறங்கி போராடினாலொழிய தமிழகத்தை கைப்பற்ற வேறு வழிகள் இல்லை . வார்டு வாரியாக போராட்டங்களை ஆரம்பித்தால் வரும் உள்ளாட்சி தேர்தலில் கணிசமாக பதவியை கைப்பற்றலாம் .
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-செப்-201710:28:56 IST Report Abuse
Cheran Perumal "அனிதா தற்கொலை செய்துகொண்டாலும் அது கொலையே." - இதைத்தானே நாங்களும் சொல்கிறோம். அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்கிறோம். எதிர்க்கட்சிகளின் அரசியல் நாடகத்தில் மாட்டிக்கொண்டு செத்தவர் அனிதா.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201709:49:24 IST Report Abuse
Srinivasan Kannaiya மெடிக்கல் சீட் பிடித்து கொடுக்கிறேன் பேர்வழி என்ற கோடிக்கணக்கில் பொதுமக்கள் பணத்தை சுரண்ட மார்க்கம் இல்லாததால் ஆர்ப்ப்பாட்டமா...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
14-செப்-201707:21:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இது நீட் ஆதரவுக்கு வந்த கூட்டம் - தமிழிசை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை