என் குரலை ஒடுக்க முடியாது: சிதம்பரம்| Dinamalar

என் குரலை ஒடுக்க முடியாது: சிதம்பரம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: 'என் மகன் கார்த்தி மீது, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதால், என் குரலை ஒடுக்க முடியாது' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் கூறியுள்ளார்.
சிதம்பரம் மகன் கார்த்தி மீது, சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து, கார்த்தி, வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. 'கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் எதுவும், வெளிநாடுகளில் இல்லை; சி.பி.ஐ., விரும்பினால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம்' என, கார்த்தி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை: எங்களிடம், கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் உள்ளன என, கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, எந்தவொரு ஆவணத்தையும் வெளிக்காட்ட தயாரா? அப்படி, கணக்கில் காட்டாத சொத்துக்கள் இருப்பதாக கூறினால், அதை அரசுக்கு மாற்றவும், என் குடும்பத்தினர் தயாராக உள்ளனர்.
மோசமான மற்றும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள், என் குரலை ஒடுக்குவதற்காக கூறப்படுகின்றன; ஆனால், அது ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-செப்-201704:20:47 IST Report Abuse
Amirthalingam Sinniah சிதம்பரனார் ஓலமிடடாலும் மகன்மேல் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தமாடடார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.