முதல்வர் மீது வழக்கு : தினகரன் பேட்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் மீது வழக்கு : தினகரன் பேட்டி

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ''காவல் துறையினர் வாயிலாக, எம்.எல்.ஏ.,க்களை மிரட்டும், முதல்வர் பழனிசாமி மீது, வழக்கு தொடர உள்ளோம்,'' என, தினகரன் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி: எங்கள் தரப்பில் உள்ள எம்.எல்.ஏ.,க்களை, காவல் துறையை அனுப்பி மிரட்டுகின்றனர். 'உங்களுக்கு, 20 கோடி ரூபாய் தருகிறோம்; முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தாருங்கள்; இல்லையெனில் வழக்கு போடுவோம்' என, கூறுகின்றனர். எம்.எல்.ஏ.,க்கள், போலீஸ் நிலையத்தில், புகார் செய்ய உள்ளனர். முதல்வர் பழனிசாமி, காவல் துறையினர் துணையுடன் மிரட்டி பார்க்கிறார்; அவர் மீது வழக்கு தொடர்வோம்.
பெரும்பான்மையை நிரூபிக்க, ஓட்டெடுப்பு நடக்கும்போது, எங்களுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும், 'ஸ்லீப்பர் செல்' எம்.எல்.ஏ.,க்கள் வெளிப்படுவர். பொதுக்குழு முடிவுக்கு, சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். ஓட்டெடுப்பின் போது கட்சியை காப்பாற்ற நான் கூறும் முடிவை, எம்.எல்.ஏ.,க்கள் எடுப்பர். கட்சியை காப்பாற்ற, எந்த முடிவையும் எடுப்பேன்.
இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை