ரயிலில் 22 கி.மீ., இழுத்து வரப்பட்ட உடல் மீட்பு| Dinamalar

ரயிலில் 22 கி.மீ., இழுத்து வரப்பட்ட உடல் மீட்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஆம்பூர்: பெங்களூரு ரயிலில், 22 கி.மீ., இழுத்து வரப்பட்ட இன்ஜினியர் உடலை, ஆம்பூரில் ரயில்வே போலீசார் கைப்பற்றினர்.
வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இல்லரீஸ், 25. பொறியியல் பட்டதாரியான இவர், ஆம்பூரில் உள்ள அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்தார். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, வீட்டில் இருந்து புறப்பட்டஇல்லரீஸ், வேலைக்கு செல்லவில்லை.
வாணியம்பாடி, புதுார் தண்டவாளத்தை ஒட்டி, உடல் இல்லாத வாலிபரின் தலை மட்டும் துண்டிக்கப்பட்டு கிடந்தது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்தனர். அதில், இறந்து கிடந்தது இல்லரீஸ் என்பதும், பெங்களூருவில் இருந்து சென்னை சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரிந்தது. அவரது உடலை தேடி வந்தனர்.
லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில், ஆம்பூர்ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டு, ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். 'ஏசி' பெட்டிகளுக்கு இடையில், இல்லரீஸ் உடல் இருந்ததும், 22 கி.மீ., வரை இழுத்து வரப்பட்டதும் தெரியவந்தது.
ரயில் தண்டவாளத்தை கடந்த போது, ரயிலில் சிக்கி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில், ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.