தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., முன்ஜாமின் மனு| Dinamalar

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., முன்ஜாமின் மனு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: நாமக்கல்லை சேர்ந்த, 'கான்ட்ராக்டர்' சுப்ரமணி, அரசு கட்டடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை எடுத்து, பணிகள் செய்து வந்தார்.
சுகாதார துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வீடு மற்றும் குவாரியில், ௨௦௧௭ ஏப்ரலில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கான்ட்ராக்டர் சுப்ரமணியின் வீட்டிலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
சோதனை நடந்த போது, சுப்ரமணி, வெளிநாட்டில் இருந்தார். தமிழகம் திரும்பியதும், வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்று வந்தார்.
இந்நிலையில், நாமக்கல்மாவட்டம், மோகனுார் அருகில் உள்ள பண்ணை வீட்டில், சுப்ரமணி இறந்து கிடந்தார். இந்த சந்தேக மரணம் குறித்து, மோகனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு, விசாரணை நடந்தது.
தற்போது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், கர்நாடக மாநிலம், கூர்க் அருகேயுள்ள ரிசார்ட்டில் தங்கி உள்ளனர். கான்ட்ராக்டர் சுப்ரமணி மரணம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பழனியப்பனிடம் மீண்டும் விசாரிப்பதற்காக, சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், பழனியப்பன் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு, இன்று விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundaram - Thanjavur,இந்தியா
14-செப்-201715:12:40 IST Report Abuse
Sundaram அதிகாரத்தை காரணம் காட்டி யாரும் சட்டத்திலிருந்து தப்பிக்க கூடாது ..தவறுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel
Jeeva - virudhunagar,இந்தியா
14-செப்-201715:11:48 IST Report Abuse
Jeeva இவனுங்க எல்லாம் கொலை கார பசங்க ...
Rate this:
Share this comment
Cancel
shekaran - thiruchi,இந்தியா
14-செப்-201715:09:10 IST Report Abuse
shekaran சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.