'ஹைடெக்' நகரங்கள் பட்டியலில் பெங்களூருக்கு 19வது இடம்| Dinamalar

'ஹைடெக்' நகரங்கள் பட்டியலில் பெங்களூருக்கு 19வது இடம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு: உலகின் ஹைடெக் நகரங்களின் பட்டியலில், பிரபலமான நகரங்களை பின்னுக்கு தள்ளி, பெங்களூரு, 19வது இடத்தை பிடித்துள்ளது.
உலக பொருளாதார மன்றம், கடந்தாண்டு நடத்திய ஆய்வில், உலகின், 'ஹைடெக்' நகரங்களின் பட்டியலில், பெங்களூரு, 49வது இடத்தில் இருந்தது.
நடப்பாண்டிலும், உலகின் வெவ்வேறு நகரங்களில், வருவாய், புதிய தொழில் உற்பத்தி, தகவல், தொழிற்நுட்ப வளர்ச்சி, ஸ்மார்ட் போன் பயன்பாடு உட்பட, பல அம்சங்களின் அடிப்படையில், ஆய்வு நடத்தியது.
ஆய்வு முடிந்து, 25 ஹைடெக் நகரங்களின் பெயர் பட்டியலை, 10ம் தேதி
வெளியிட்டது. பெங்களூரு, 19வது இடத்தை பிடித்துள்ளது.
ஒரே ஆண்டில், 49வது இடத்திலிருந்து, 19 இடத்துக்கு முன்னேறியிருப்பது, நல்ல முன்னேற்றம் என, வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பர்லின், ஹாங்காங், கோபன்ஹேகன், பார்சிலோன் போன்ற முக்கிய நகரங்களை பின்னுக்கு தள்ளி, பெங்களூரு முன்னணிக்கு வந்துள்ளது.
நாட்டின் வேறு எந்த நகரங்களும், உலக நகரங்களுக்கு நிகராக போட்டி போடுவதில் தோல்வி அடைந்தன என்பது, பெங்களூருக்கு கிடைத்த பெருமையாகும்.
தொழிற்துறை அமைச்சர், ஆர்.வி.தேஷ்பாண்டே கூறியதாவது:
உலகின் ஹைடெக் நகரங்களின் பட்டியலில், பெங்களூரு, 19வது இடத்தை பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எதிர்காலத்தில், முதலிடத்தை பிடிக்க, முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.