பெங்களூரு சாலை சீரமைக்க ரூ.2,095 கோடி அனுமதி : பவுரிங் மருத்துவமனையில் ரூ.197 கோடியில் மருத்துவ கல்லூரி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெங்களூரு சாலை சீரமைக்க ரூ.2,095 கோடி அனுமதி : பவுரிங் மருத்துவமனையில் ரூ.197 கோடியில் மருத்துவ கல்லூரி

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெங்களூரு: கர்நாடக மாநில அபிவிருத்தி கார்ப்பரேஷன் மூலம், பெங்களூரு சுற்றுப்புற பகுதிகளில், 150 கி.மீ., நீள சாலைகளை, 2,095 கோடி ரூபாயில் சீரமைக்க, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடக அமைச்சரவை கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்க, தரமான அரிசி வழங்கும் கல்வி துறை கோரிக்கைக்கு ஒப்புதல்
பெங்களூரு பவுரிங் மருத்துவமனை வளாகத்தில், 197.54 கோடி ரூபாய் செலவில், புதிய மருத்துவ கல்லுாரி, கோஷா மருத்துவமனை வளாகத்தில், சிறுமியர் விடுதி கட்டடம் கட்ட அனுமதி
கர்நாடக மாநில அபிவிருத்தி கார்ப்பரேஷன் மூலம், பெங்களூரு சுற்றுப்புற பகுதிகளில், 150 கி.மீ., நீள சாலைகள், 2,095 கோடி ரூபாயில் அபிவிருத்தி
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை செயல்படுத்தவும், ஆய்வு செய்யவும் கமிட்டி அமைத்தல்
கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள், கண்காணிப்பாளர்களை நியமிக்கும் போது, விளையாட்டு போட்டிகளின் சாதனையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், வனத்துறை சேவைகள் சிறப்பு நியமன விதிகள் செயல்படுத்த ஒப்புதல்
கதக்கில், 100 படுக்கை கொண்ட பெண்கள், குழந்தைகள் மருத்துவமனையை நவீனப்படுத்தவும், விஸ்தரிக்கும் பணிகளை மேற்கொள்ள, 508.85 லட்சம் ரூபாய் செலவிட அனுமதி
தார்வாடின், கர்நாடக அறிவியல் வர்த்தகம், கல்லுாரியின் நுாற்றாண்டு விழா கொண்டாட, 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டச்சாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை செயல்படுத்த, மேற்பார்வை கமிட்டி அமைத்தல்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை