மழையால் பள்ளங்கள் ஏற்பட்டது ஏன்? : மேயர் 'சப்பைக்கட்டு'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மழையால் பள்ளங்கள் ஏற்பட்டது ஏன்? : மேயர் 'சப்பைக்கட்டு'

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெங்களூரு: “தொடர் மழையால், சாலைகள் சேதமடைந்துள்ளன. எங்கு அதிகமாக நீர் பாய்ந்ததோ, அங்கு மட்டுமே பள்ளங்கள் விழுந்துள்ளன. உரிய முறையில் டெண்டர் கோரி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என, பெருநகர பெங்களூரு மாநகராட்சி மேயர் ஜி.பத்மாவதி தெரிவித்தார்.

பெங்களூரில், செய்தியாளர்களிடம், நேற்று, அவர் கூறியதாவது: சாலைகளில் தார்போடுவதில் முறைகேடு நடந்துள்ளதாக, பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் என்.ஆர்.ரமேஷ் கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை. பெங்களூரில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்ததால், சாலைகள் பாழாகியுள்ளன. எங்கு அதிகமாக நீர் பாய்ந்ததோ, அங்கு மட்டுமே பள்ளங்கள் விழுந்துள்ளன. உரிய முறையில் டெண்டர் கோரி, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சாலைகளில் தார்போடுவதில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. சட்டப்படி டெண்டர் மூலமாகவே, பணிகள் நடைபெறுகின்றன.
பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய, தனிக்குழு உள்ளது. கமிஷனர் கீழ் இயங்கும் தொழிற்நுட்ப கண்காணிப்பு பிரிவினரின் அறிக்கையில், கலப்படமாக பணிகள் நடந்துள்ளதாக கூறப்படவில்லை.
தரமான பணிகள் நடந்து வருகின்றன. இயற்கையின் சீற்றத்தால், சாலைகள் பாழாகியுள்ளன; சரி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை