தனியார் மருத்துவமனை கட்டுப்பாடு : மசோதாவுக்கு பா.ஜ., எதிர்ப்பு?| Dinamalar

தனியார் மருத்துவமனை கட்டுப்பாடு : மசோதாவுக்கு பா.ஜ., எதிர்ப்பு?

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெங்களூரு : சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு வகுத்துள்ள, கர்நாடக தனியார் மருத்துவமனைகள் கட்டுப்பாடு மசோதாவின், சில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, இணை பரிசீலனை கமிட்டியின் பா.ஜ., உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில், அந்தந்த சிகிச்சைக்கான கட்டண விபரங்களை வெளியிடுவதை கட்டாயமாக்குவது உட்பட, பல அம்சங்கள் அடங்கிய மசோதாவை அரசு வகுத்துள்ளது.
இம்மசோதா சட்ட
சபையில் தாக்கல் செய்யப்பட்ட போது, சில திருத்தங்கள் தேவை என, கட்சி வேறுபாடின்றி, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் வலியுறுத்தினர்.
எனவே, இம்மசோதா குறித்து ஆய்வு செய்ய, இணை பரிசீலனை கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டியும் பல முறை ஆலோசனை நடத்தி, மசோதா குறித்து விவாதித்தது.
நாளை, இறுதி சுற்று ஆலோசனை நடக்கவுள்ளது.
இதில், சில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பா.ஜ., முடிவு செய்து
உள்ளது.
தற்போதைய மசோதாவில், தனியார் மருத்துவமனைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளையும் சேர்த்து, கர்நாடக மருத்துவமனைகள் சட்டம் என பெயர் சூட்டப்பட வேண்டும்.
மசோதா செயல்படுத்துவதை கண்காணிக்க, பல கமிட்டிகள் உள்ளதால், மாவட்ட கமிட்டி தேவையில்லை. அவ்வாறு அமைப்பதால், டாக்டர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது உட்பட, சில கருத்துகளை தெரிவிக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை