குழந்தைகளுக்கு மதிய உணவை நிறுத்தியதற்கு மன்னிப்பே கிடையாது! : ஆர்.எஸ்.எஸ்., கண்டனம்| Dinamalar

குழந்தைகளுக்கு மதிய உணவை நிறுத்தியதற்கு மன்னிப்பே கிடையாது! : ஆர்.எஸ்.எஸ்., கண்டனம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மைசூரு: “மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிதியுதவியை அரசியல் காரணங்களுக்காக நிறுத்தியது மன்னிக்க முடியாது,” என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் தெரிவித்தார்.
மங்களூரு மாவட்டம், பன்ட்வாலில் அரசு உதவி பெறும் 'ஸ்ரீராம வித்யா கேந்திரா, ஸ்ரீதேவி வித்யா கேந்திரா' ஆகிய இரு பள்ளிகளை, ஆர்.எஸ்.எஸ்., நிர்வகித்து வருகிறது.
இப்பள்ளிக்கு, உடுப்பி மாவட்டம் கொல்லுார் மூகாம்பிகை கோவில் மூலம், மதிய உணவு வழங்குவதற்கான நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. இதை, மாநில அரசின் கீழ் இயங்கி வரும் அறநிலைய துறை திடீரென்று நிறுத்தியது. இதை கண்டித்து, போராட்டங்கள் நடத்தப்பட்டன.
“இந்த பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்வோம்,” என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் கூறியிருந்தார்.
மாணவ மாணவியருக்கு உதவும் வகையில், மைசூரு ஆஞ்சநேயா கோவில் அருகில், 'பிக் ஷாந்தேகி' சமூக விழிப்புணர்வு மூலம், ஸ்ரீராம வித்யா கேந்திரா, ஸ்ரீதேவி வித்யாகேந்திரா ஆகிய பள்ளிகளுக்கு, 555 அரிசி மூடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பின், செய்தியாளர்களிடம், கல்லட்கா பிரபாகர் கூறியதாவது:
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க, கொல்லுார் மூகாம்பிகை கோவில் மூலம் வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை, அரசியல் காரணங்களுக்காக நிறுத்தியது, மன்னிக்க முடியாதது.
அனைவருக்கும் தேவையான வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், மாநில அரசு, பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதை நிறுத்திவிட்டது.
கோவிலுக்கு வரும் நிதியில், ஒரு பகுதி, சமூக நல சேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமூகத்தில், கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே, குழந்தைகளுக்கு கோவில் உணவு வழங்கி வந்தது. அரசின் செயலை, யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டர்.
வன்முறைக்கு ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் துணை நிற்காது. கவுரியோ அல்லது அவரது தந்தை பற்றியோ எதுவும் தெரியாது. தனக்கு தோன்றியதை அவர் எழுதியுள்ளார்.
என்னை பற்றி அவர் என்ன எழுதினார் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. எழுத உரிமை இருந்தாலும், மற்றவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த கூடாது.
சித்தாந்தங்களுக்காக ஆர்.எஸ்.எஸ்., போராட்டம் நடத்தியதே தவிர, வன்முறையில் ஈடுபட்டதில்லை. தேசியவாதிகளாகவே உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பிச்சை கேட்கவில்லை
முதல்வர் சித்தராமையா, ராட்சச குணம் கொண்டவர். கம்சன், கவுரவர்கள், ராவணன் போன்றவர்களிடம், யாராவது பிச்சை கேட்பார்களா. எங்கள் பள்ளிக்கு, பிச்சை போட வேண்டிய, அவசியமில்லை. நாங்களும் கேட்க மாட்டோம். நல்ல உள்ளங்களின் ஆதரவுடன், எங்கள் பள்ளியை நடத்துவோம். அரசின் உதவியை எதிர்பார்க்கவில்லை.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.