தசரா விழாவில், 'ஸ்டார் நைட்' : அதிக ரூபாய் கேட்டவர்கள், 'கட்'| Dinamalar

தசரா விழாவில், 'ஸ்டார் நைட்' : அதிக ரூபாய் கேட்டவர்கள், 'கட்'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மைசூரு: கடந்தாண்டு போன்று, மைசூரு தசராவுக்கு, பெரிய நட்சத்திர பாடகர்களை அழைக்காமல், 'நியாய'மான முறையில் தொகை கேட்ட பாடகர்கள் பாடவுள்ளனர்.
தசரா கலாசார நிகழ்ச்சியில் பாட, இந்திய இசை உலகம் மற்றும் பாலிவுட் பிரபலங்களை சந்தித்து ஒருங்கிணைப்பு கமிட்டியினர் பேசினர். அவர்கள், பெரிய தொகையை கேட்டதால், குழுவினர் பின்வாங்கி விட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், மைசூரு தசரா கலாசார நிகழ்ச்சிகள் அடங்கிய போஸ்டர் வெளியீட்டு விழா நடந்தது.
இம்மாதம், 22ம் தேதி நடக்கும் இசை நிகழ்ச்சிக்கு, ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக நிதி திரட்டும், 'தில் சி தில் தக்' பாடல் புகழ், பாடகர் பாலக் முச்சால், மங்களூரை சேர்ந்த நாகாஷ் அஜிஸ், பாலிவுட் பாடகர்கள் நீதி மோகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
வரும், 24ல், 'கோக் ஸ்டூடியோ'; 25ல், இசையமைப்பாளரும், பாடகருமான அர்ஜூன் ஜான்யா; 27ல், 'ரெட் புல் டூர் பஸ்' சார்பில் இசை நிகழ்ச்சி; 28ல்,
'சாண்டல்வுட் ஸ்டார் நைட்' நிகழ்ச்சியில், நடிகர் சிவராஜ் குமார்; 29ல், 'கந்தத குடி ஸ்டார் நைட்' நிகழ்ச்சியில், நடிகர் தர்ஷன் பங்கேற்கின்றனர்.
யுவ தசரா நிகழ்ச்சியில் பங்கேற்கும் பாடகருக்கு, குறைந்தபட்சம், 15 லட்சம் ரூபாய் ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தசரா நடக்கும் மகாராஜா கல்லுாரி மைதானத்தில், 32 கண்காணிப்பு கேமராவை இலவசமாக பொருத்த, தனியார் நிறுவனம்
முன்வந்துள்ளது.
கடந்தாண்டு, 50 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை கிடைத்தது. இந்தாண்டு, ஒரு கோடி ரூபாய் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்
படுகிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.