வரிந்து கட்டும் காங்., கோஷ்டிகள் முதல்வருக்காக, 'வெயிட்டிங்' | Dinamalar

வரிந்து கட்டும் காங்., கோஷ்டிகள் முதல்வருக்காக, 'வெயிட்டிங்'

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோலார்: கோலார் மாவட்டத்தில் அரசின் திட்டப்பணிகளை துவக்கி வைப்பதற்கு வரும் முதல்வர் சித்தராமையாவிடம், தன் செல்வாக்கை காட்டுவதற்காக, காங்கிரஸ் கோஷ்டிகள் தயாராகி வருகின்றன.
தங்கவயல் தாலுகா துவக்க விழா உட்பட, கோலார் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை துவக்க, 20ம் தேதி, முதல்வர் சித்தராமையா வருகை தருகிறார்.
விழா நடத்துவதற்கான இடம் குறித்து நேற்று முன்தினம் ஆய்வு செய்யப்பட்டது. 'டமக்கா' என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள, மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் நடத்தலாமா என்பது பற்றி, அமைச்சர், ரமேஷ்குமார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
இட ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர், திரிலோக் சந்தர், எஸ்.பி., ரோஹினி கொட்டாச்சி, மேலவை முன்னாள் தலைவர், சுதர்சன், முன்னாள் அமைச்சர், நிசார் அகமது, ஜில்லா பஞ்சாயத்து செயலர், காவிரி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
முதல்வர் வருகையின்போது, குழப்பம், குளறுபடி, அசம்பாவிதம் எதுவும் ஏற்படாதவாறு கவனித்து கொள்ள வேண்டும்.
கோலார் மாவட்ட, 'புதிய கலெக்டர் அலுவலகம்' கிழக்கு பகுதியில் வாகனங்கள் நிறுத்த வேண்டும் என, எஸ்.பி., ரோஹினி கொட்டாச்சிக்கும் அமைச்சர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.
முதல்வர் வருகை, மாவட்ட அபிவிருத்தி திட்டப்பணிகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க, நாளை பிற்பகல், 3:00 மணிக்கு, ஜில்லா பஞ்சாயத்து அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் அதிகாரிகளின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் காங்கிரஸ் செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில், 10 ஆயிரம் பேர் அமரும் வகையில், பந்தல் அமைக்க உள்ளனர். இம்மாவட்டத்தில், முனியப்பா எம்.பி., தலைமையில் ஒரு கோஷ்டியும், மாவட்ட பொறுப்பு அமைச்சர், கே.ஆர்.ரமேஷ் குமார் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் செயல்பட்டு வருகிறது.
இரு கோஷ்டிகளும் தங்கள் செல்வாக்கை எடுத்து காண்பிக்கும் வகையில், ஆதரவாளர்களை உசுப்பேத்தி விட்டுள்ளனர்.
இதே வேளையில், கோலாரில் தாங்கள் தான் செல்வாக்குடன் இருக்கிறோம் என்பதை எதிர்க்கட்சிகளான பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வுக்கு எடுத்து காட்ட, முதல்வரும் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை