ஆசிரியர்கள் கையில் மாணவர் முன்னேற்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆசிரியர்கள் கையில் மாணவர் முன்னேற்றம்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பங்கார்பேட்டை: “மாணவர்கள் முன்னேற்றம், ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது,” என, பங்கார்பேட்டை தொகுதி காங்., - எம்.எல்.ஏ., நாராயணசாமி வலியுறுத்தினார்.
தேசிய ஆசிரியர்கள் தினவிழா, பங்கார்பேட்டை, எஸ்.என்.ஆர்., ரிஸார்ட்டில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவை துவக்கி வைத்து, எம்.எல்.ஏ., நாராயணசாமி பேசியதாவது:
கல்வி, அனைவருக்கும் பொதுவானது. தரமான, உயர்வான கல்வி அவசியம். கல்வி ஒன்றே, சமுதாயத்தின் தரத்தை உயர்த்தும்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தை போதிக்க வேண்டும்; மனித நேயத்தை வளர்க்க வேண்டும்.
கல்வியின் தரம் உயர வேண்டுமென்ற அக்கறை ஆசிரியர்களுக்கு இருந்தால் மட்டுமே, மாணவர்களின் எதிர்காலம் சுபிட்சமாக இருக்கும். கல்வியுடன் ஒழுக்கத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நோயாளி ஒருவருக்கு, தவறாக சிகிச்சை அளித்தால், அவர் உயிர் போகும். ஆசிரியர்கள் தவறாக கல்வியை போதித்தால், சமுதாயமே நாசமாகும்.
சமுதாயத்தை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு, ஆசிரியர்களிடம் உள்ளது. சமுதாயத்தில் ஒரு சாதனையாளர் உயருகிறார் என்றால் அதன் பின்பலமாக, ஆசிரியர் தான் இருக்கிறார்.
கல்விக்கு கரையே இல்லை. மனித வாழ்வின் வளர்ச்சிக்கு கல்வி தான் எல்லை. கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள். அவர்கள், பூஜிக்க வேண்டியவர்களாக இருப்பதால், கண்ணியமிக்கவர்களாக விளங்க வேண்டும்.
மாணவர்களுக்கு சமூக அறிவு, சுற்றுப்புற சூழல், தேச பக்தி, ஆகியவற்றையும் கற்று கொடுக்க வேண்டும்.
பங்கார்பேட்டையில், 'குருபவன்' அமைக்க, 10 சென்ட் நிலமும், எம்.எல்.ஏ., நிதியில், 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கோலார் மாவட்ட கன்னட சாகித்ய பரிஷத் தலைவர் நாகராஜ், மாவட்ட கல்வித்துறை இணை இயக்குனர், சுவாமி, தாசில்தார் சத்திய பிரகாஷ், தாலுகா பஞ்சாயத்து தலைவர், பாக்கிய லட்சுமி உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை