மைசூரில் 26 ஆண்டுக்கு பின் கன்னட மாநாடு| Dinamalar

மைசூரில் 26 ஆண்டுக்கு பின் கன்னட மாநாடு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மைசூரு: மைசூரில், 26 ஆண்டுக்கு பின், 83வது அகில இந்திய கன்னட மாநாடு நடக்கவுள்ளது. நவ., 24 முதல், 26ம் தேதி வரை நடக்கவுள்ள மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன.
கன்னட இலக்கிய பரிஷத் தலைவர், பலிகார், மைசூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மைசூரில், 1917ல், நஞ்சுண்டையா, 1930ல், ஆலுர் வெங்கட ராயர், 1955ல், சிவராம் காரந்த், 1991ல், நரசிம்ம சாமி தலைமையில், கன்னட இலக்கிய மாநாடு நடந்துள்ளது.
கடந்த, 26 ஆண்டுகளுக்கு பின், ஐந்தாவது முறையாக, கன்னட இலக்கிய மாநாடு மூன்று நாட்கள் நடக்கவுள்ளது. மைசூரு அரண்மனை வளாகம், மகாராஜா கல்லுாரி மைதானம், பொருட்காட்சி மையம் ஆகிய இடங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இவற்றில், ஏதாவது ஒரு இடத்தில், கன்னட இலக்கிய மாநாடு நடக்கும்.
மாநாட்டுக்கு தலைமை வகிப்பது யார் என, செயற்குழுவில் முடிவு செய்யப்படும்.
ராய்ச்சூரில் நடந்த 82வது மாநாட்டில், 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர். மைசூரில் நடக்கும், 83வது மாநாட்டில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு, குடிநீர் என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.