திருநங்கையர்களை கவுரவத்துடன் நடத்துங்கள் : தங்கவயல் முதன்மை நீதிபதி ஜெகதீஸ்வரா விருப்பம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திருநங்கையர்களை கவுரவத்துடன் நடத்துங்கள் : தங்கவயல் முதன்மை நீதிபதி ஜெகதீஸ்வரா விருப்பம்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தங்கவயல்: ''திருநங்கையர்களும் சமுதாயத்தில் கவுரவமானவர்கள் தான். அவர்களை இழிவாகவும், குற்றவாளிகளாகவும் கருத கூடாது,'' என தங்கவயல் முதன்மை நீதிபதி ஜெகதீஸ்வரா கூறினார்.
திருநங்கையர்களுக்கான விழிப்புணர்வு இயக்க கூட்டம், தங்கவயல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்க அரங்கில், நேற்று நடந்தது.
வக்கீல்கள் சங்க பொது செயலர் ஜோதிபாசு பேசுகையில், ''திருநங்கைகள் போலீசாரின் கெடுபிடியில், அல்லல்படுவதாக வருந்துகின்றனர்.
அவர்களுக்கு உரிய பாதுகாப்பும், அடிப்படை வசதிகளையும் வழங்க சட்டத்தில் இடமுள்ளது. என்றார்.
நீதிபதி ஜெகதீஸ்வரா பேசுகையில், ''சட்டத்தின் முன், மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள். திருநங்கையர்கள் சமுதாயத்துடன் இணைந்து வாழ அச்சப்பட தேவையில்லை. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, அரசின் கடமையாகும்.
கல்வி, வேலை வாய்ப்பு, ஓட்டுரிமை, ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டைகள், வாழ்வதற்கு வீடு என அனைத்தும் கிடைக்க வேண்டும்.
இவர்களை ஒதுக்கி வைப்பதில் நியாயம் கிடையாது. அவர்களுக்கும் எல்லாவிதமான கவுரவம் உள்ளது. இவர்களை துன்புறுத்துவதாக, போலீசார் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. திருநங்கையர்களுக்கு சமுதாய அந்தஸ்து வழங்க வேண்டும்.
போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் திருநங்கையர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். குற்றவாளிகளாக கருத கூடாது.
சிலரை, பாலியல் தொழிலில் வலுகட்டாயமாக ஈடுபடுத்துகின்றனர். நேர்மையாக உழைத்து சம்பாதிக்க விரும்புகிறவர்களை, தவறாக பயன்படுத்துவோர் குற்றவாளிகள். அப்பாவிகளை, குற்றவாளிகளாக கருத கூடாது. சமூக பாதுகாப்புக்கேற்ற பல வழிகள் உள்ளன. நேர்மையான வழியில் வாழ வேண்டும். சட்ட சலுகை உள்ளது,'' என்றார்.
போலீஸ் எஸ்.பி., லோகேஷ் குமார் பேசுகையில், ''சமுதாயத்தில் திருநங்கையர்களுக்கு கெடுபிடி இருக்காது. சட்டப்படி, அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு அளிக்கவே போலீஸ் துறை உள்ளது.
சட்டத்தை மீறுவோர் தான் அச்சப்பட வேண்டும். மற்றபடி போலீஸ், உங்கள் நண்பன் தான். சமுதாயத்தில் அனைத்து மக்களுடனும் சமமாக வாழ்வதற்கு பயப்பட தேவையில்லை. போலீஸ் நிலையங்களில் உரிய மரியாதையுடன் தான் நடத்தப்படுவர்,'' என்றார்.
நீதிபதி ரவிகுமார், டி.எஸ்.பி., சீனிவாச மூர்த்தி, போலீசார், நுாற்றுக்கும் அதிகமான திருநங்கையர்கள் கலந்து கொண்டனர்.
தங்கவயல் மட்டுமின்றி, கோலார் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளிலிருந்தும் திருநங்கையர்கள் வந்திருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை