வெளிநாட்டு நன்கொடை விவகாரம் : 1,222 என்.ஜி.ஓ.,க்களுக்கு சிக்கல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வெளிநாட்டு நன்கொடை விவகாரம் : 1,222 என்.ஜி.ஓ.,க்களுக்கு சிக்கல்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள 1,222 என்.ஜி.ஓ.,க் களுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள கடித விபரம்: அன்னிய நன்கொடை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட, என்.ஜி.ஓ.,க்கள், வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் அனைத்து நன்கொடைகளையும், அதற்கென செயல்படும், ஒற்றை வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். பல, என்.ஜி.ஓ.,க்கள், தாங்கள் பெறும்
அன்னிய நன்கொடைகள் குறித்த விபரங்களை அளிப்பதில்லை. இதனால், நன்கொடைகள் தொடர்பான தகவல்கள், 48 மணி நேரத்தில், மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்ற, விதிகளை, சம்பந்தப்பட்ட வங்கிகள் பின்பற்ற முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, உத்தரவு கடிதம் பெற்ற, என்.ஜி.ஓ.,க்கள், தாங்கள் பெறும், அன்னிய நன்கொடைகள் குறித்த விபரங்களை தாமதமின்றி தெரிவிக்க வேண்டும். தவறினால், தொடர்புள்ள, என்.ஜி.ஓ.,க்களுக்கு, அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு உத்தரவு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை