ராமநாதபுரத்தில் ரூ.200 க்கு அலைபேசி : அலைமோதிய மக்கள் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் ரூ.200 க்கு அலைபேசி : அலைமோதிய மக்கள் கூட்டம்

Added : செப் 13, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழாவில் 200 ரூபாய்க்கு ஆன்ட்ராய்டு அலைபேசி வழங்கிய கடையை நோக்கி மக்கள் திரண்டதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.ராமநாதபுரம் சாலைத்தெருவில் 'சென்னை மொபைல் போன் ஷோரூம்' நேற்று திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் சலுகையாக 200 ரூபாய்க்கு ஆன்ட்ராய்டு போன் வழங்குவதாக அறிவிக்கபட்டது. இதனால் நேற்று காலை 8:00 மணியிலிருந்தே அந்த கடையை நோக்கி மக்கள் படை எடுக்க துவங்கினர். ஒரு சிலருக்கு 200 ரூபாய்க்கு அலைபேசி வழங்கப்
பட்டது. இந்த தகவல் நகர் முழுவதும் பரவிய தால், அந்தப்பகுதியில் அதிகளவில் மக்கள் திரண்டனர். இதனால் சாலை தெருவில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.
கூட்டத்தினை சமாளிக்க முடியாத நிறுவனத்தினர் கடையை அடைத்து விட்டனர். கடைக்காரர்களால் டோக்கன் பெற்றவர்கள் பல மணி நேரம் காத்திருந்தும் கடை திறக்காததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-செப்-201704:44:32 IST Report Abuse
Amirthalingam Sinniah இந்த தோலை பேசி எத்தனை நாட்களுக்கு பாவிக்கும் என்பதை செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை