பழநியில் காய்ச்சலுக்கு 21வது பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநியில் காய்ச்சலுக்கு 21வது பலி

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பழநி: பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் மர்ம காய்ச்சலால் இளம் பெண் இறந்தார். இதுவரை 21பேர் காய்ச்சலால் இறந்து உள்ளது மக்களை அச்சமடைய செய்துஉள்ளது.
பழநி அருகே நெய்க்காரப்பட்டி கோட்டைமேடுத் தெருவை சேர்ந்த சாகுல்அமீது மகள் சையது ஆரிபா,19. சிலநாட்களாக காய்ச்சல் பாதிப்பால் பழநி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றார்.பின்,கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுதிரும்பினார். இந்நிலையில் திடீரென மீண்டும் உடல்நலம் பாதித்த அவர், நேற்று காலை
திடீரென இறந்தார். இதனால் நெய்க்காரப்பட்டியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டுள்ளனர்.
காவு வாங்கும் காய்ச்சல்இறந்த சையதுஆரிபாவுடன் சேர்த்து பழநி பகுதிகளில் இதுவரை 21பேர் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். சுகாதார துறை அமைச்சர் முதல் உயரதிகாரிகள் வரை முகாமிட்டும் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த இயலவில்லை.நெய்க்காரப்பட்டி மக்கள் கூறுகையில்,“எங்கள் பகுதி யில் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளது. குப்பை அள்ளப்படாமல் குவிந்துள்ளது. பலமுறை கூறியும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. உயிர்
பலியாகும்போது மட்டும் வருகின்றனர்.
மற்ற நேரங்களில் சுகாதார பணியையே மறந்து விடுகின்றனர். தற்போது செய்யும் பணியை முறையாக செய்திருந்தால் காய்ச்சல் பலியை தடுத்திருக்கலாம்” என்றனர்.

சாணார்பட்டி : சாணார்பட்டி பகுதியில் மர்ம காய்ச்ச லால் பாதிக்கப்பட்டஇரு சிறுவர்கள்
பலியாகினர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு நேற்று வரை 21 பேர் பலியாகிஉள்ளனர்.இந்நிலையில் நேற்று சாணார்பட்டி பகுதியில் நேற்று 2 சிறுவர்கள்
பலியாகியுள்ளனர். இந்த ஒன்றியத்தில் உள்ள ராஜக்காபட்டியை சேர்ந்த அய்யன்
பெருமாள் மகன் மோனிஷ், 1, மற்றும் தீத்தாம்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி மகன்
தன்வர்ஷன், 3. இருவருக்கும் 2 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டது.இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின்பு மேல் சிகிச்ைசக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை