அலுவலர்களை தாக்கிய வக்கீல் கைது : ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரகளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அலுவலர்களை தாக்கிய வக்கீல் கைது : ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரகளை

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சிவகங்கை: சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து ரகளை செய்து அரசு அலுவலர்களை தாக்கிய வக்கீலை போலீசார் கைது செய்தனர். மதுரை ஆனையூர் சாந்தி நகரை சேர்ந்தவர் சரவணன், 48. இவர், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட தலைமை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இதே அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிபவர் திருப்புவனம் பூங்கா நகரைச்சேர்ந்த பிரபாகரன்,47. இவர்கள் இருவரும் நேற்று
மாலை 3: 3 0 மணிக்கு அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது பொதுமக்கள்
சிலர் நின்று கொண்டிருந்தனர்.அப்போது ஜீவனாம்ச வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதற்காக பெண் அலுவலர் ஒருவரிடம் வக்காலத்தில் கையெழுத்து வாங்க வக்கீல்கள் சிலர் வந்துஉள்ளனர். அவர்கள் கையெழுத்து கேட்டபோது, பெண் அலுவலர் அங்குள்ள தபால் பெட்டியில் போட்டு விட்டு செல்லும்படி தெரிவித்துள்ளார். அதை ஏற்காமல்
வக்கீல் ரஞ்சித்குமார்,46, வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அருகில் இருந்த
சரவணனும், பிரபாகரனும் என்ன பிரச்னை என கேட்டுள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார் அலுவலக கண்ணாடியை உடைத்துள்ளார். இதை கண்டித்த சரவணனும், பிரபாகரனும் தாக்கப்பட்டனர். இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு
அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்களை தாக்கி விட்டு தப்பி ஓடிய ரஞ்சித்குமாரை கோட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் விரட்டிச்சென்றனர். அவர் அருகில் உள்ள ஒரு அலுவலகத்திற்குள் ஓடி ஒளிந்தார். அவரை பிடித்து சிவகங்கை டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார்
கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை