வனங்களை பாதுகாக்க மேய்ச்சல் நிலம் மீட்பு அவசியம் : வனப்பாதுகாவலர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனங்களை பாதுகாக்க மேய்ச்சல் நிலம் மீட்பு அவசியம் : வனப்பாதுகாவலர் தகவல்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்: 'வருவாய்த் துறையின் மூலம் ஒவ்வொருகிராமத்திலும் ஆக்கிரமிப்பில் உள்ள மேய்ச்சல் நிலங்களை மீட்டு விவசாயிகள் பயன் அடைய செய்ய வேண்டும்' என, மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதன் கூறினார்.

திண்டுக்கல்லில் கால்நடை வளர்ப்போர் விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
பல ஆண்டுகளாகதமிழக கிராமங்களில் மேய்ச்சல் நிலங்கள் உள்ளன.நமது முன்னோர் ஆடு, மாடுகள் உட்பட கால்நடைகளின் தீவனத்திற்காகவே, இந்த நிலங்களை தயார் செய்து வைத்துள்ளனர்.அனைத்து கிராமத்திலும் மேய்ச்சல் நிலங்கள் உள்ளதாக வருவாய்த்துறை ஆவணங்
களில் குறிப்பு உள்ளது. ஆனால், இதை தற்போது சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால்தான் சிலர் ஆடு, மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்க்கின்றனர். இவ்வாறு மேய்ப்பதால் வன வளம் பாதிக்கிறது. அரிய வகை மூலிகைச் செடிகளும் பாதிக்கப்படுகின்றன.
கால்நடைகளால் வன விலங்குகளுக்கும் நோய்கள் ஏற்பட்டு அழிகின்றன. காடுகளின் வளம் குறுகி வருகிறது. எனவே காடுகளை காக்க, ஆக்கிரமிப்பில் உள்ள மேய்ச்சல் நிலங்களை நாம் கண்டுபிடித்து மீட்க வேண்டும். இதற்கு வருவாய்த்துறை உதவ வேண்டும்., என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை