புரட்டாசி மாத பூஜைகளுக்கு சபரிமலை நடை செப்.16-ல் திறப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புரட்டாசி மாத பூஜைகளுக்கு சபரிமலை நடை செப்.16-ல் திறப்பு

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சபரிமலை: புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை செப். 16-ம் தேதி திறக்கிறது. 21 வரை நடை திறந்திருக்கும்.16-ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணி
கிருஷ்ணன் நம்பூதிரி நடைதிறந்து விளக்கு ஏற்றுவார். தொடர்ந்து அபிஷேக திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.17-ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை 5:30 முதல் 11:30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை போன்ற பூஜைகளுடன் களபாபிஷேகம், சகஸ்ரகலசம் போன்ற பூஜைகளும் நடைபெறும்.17 முதல் 21-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை
நடைபெறும். 21-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை