தென்மேற்கு பருவமழை தீவிரம் : அருவிகளில் வெள்ளப்பெருக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை தீவிரம் : அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பல மாவட்ட அருவிகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, தேனி, நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், அருவிகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், இந்த அருவிகள் உள்ளதால், தென் மேற்கு பருவமழை காலங்களில், அருவிகளுக்கு கூடுதல் நீர்வரத்து கிடைத்து வருகிறது. ஜூனில் துவங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதால், பல மாவட்ட அருவிகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருவிகளில், அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், நிலைமையை பொறுத்து பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, தேனி மாவட்டம் கும்பக்கரை மற்றும் நாமக்கல் மாவட்டம், ஆகாயகங்கை அருவிகளில், தற்போது வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இவை மட்டுமின்றி நீலகிரி, கோவையில் உள்ள குற்றாலம், வைதேகி, சிறுவாணி உள்ளிட்ட அருவிகளிலும் நீரோட்டம் அதிகரித்துள்ளது. இவற்றில், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் நீராடி வருகின்றனர். வெள்ளப்பெருக்கின் அளவை தொடர்ச்சியாக வனத்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பருவமழை இறுதிக் கட்டத்தை நெருங்குவதால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை