போலி பணி ஆணை வழங்கி பல கோடி சுருட்டல்! : கோவையில் சிக்கியது மோசடி கும்பல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி பணி ஆணை வழங்கி பல கோடி சுருட்டல்! : கோவையில் சிக்கியது மோசடி கும்பல்

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை: மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக, போலி பணி நியமன ஆணை கொடுத்து கைதான, மூன்று பேர் கும்பல் குறித்து பல்வேறு தகவல் வெளியாகி உள்ளது; மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என, தெரிகிறது.
கோவை, ஈச்சனாரியைச் சேர்ந்தவர் சங்கர் ராஜா, 35. இவர், கலெக்டர் அலுவலகத்தில், திட்ட அலுவலக இயக்குனராக பணியாற்றுவதாக கூறி, பலரிடம் மோசடி செய்தார். மத்திய அரசு துறையில், 'டெவலப்மென்ட் ஆபீசர்' வேலை வாங்கி தருவதாகவும், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்கி தருவதாகவும், பல கோடி ரூபாய் சுருட்டினார்.
மோசடி தொடர்பாக, மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சங்கர் ராஜா மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த, 39, 37 வயதுடைய இருவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, இரண்டு வெளிநாட்டு பைக்குகள் உட்பட, ஒன்பது இருசக்கர வாகனங்கள், மூன்று கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட, சங்கர் ராஜாவின் சொந்த ஊர் பழநி. இவர் மீது, ஏற்கனவே மோசடி வழக்குகள் உள்ளன. அரசு அதிகாரியாக வேறு ஒருவர் பெயரில் நடித்து, பலரிடம் கோடி கணக்கில் பணம் பெற்று, மோசடி செய்துள்ளனர். மோசடி பணத்தில் சொகுசு கார்கள் வாங்கி, இன்ப சுற்றுலா சென்று வந்துள்ளனர். இவர்கள் மீது தற்போது வரை, 90 பேர் புகார் அளித்துள்ளனர். மோசடியில், மேலும் நான்கு பேருக்கு தொடர்பிருக்கலாம் என, தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூவரையும், 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.30 லட்சத்தில் சொகுசு கார்
கைதான சங்கர் ராஜாவின் மனைவிக்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வர உள்ளது. இதற்காக, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் ஒன்றை புதிதாக, 'புக்' செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

சசிகலா உறவினர் பெயரில் மிரட்டல்
மோசடி கும்பலின் தலைவனான சங்கர் ராஜா, தன்னிடம் வேலை கேட்டு, வீட்டுமனை பட்டா கேட்டு வருவோரிடம், சசிகலாவின் உறவினரான பாஸ்கரன், தன் நண்பர் என, கூறி வந்துள்ளார். இவர் மூலம், தனக்கு பல அதிகாரிகள் பழக்கம் உள்ளதாகவும், அவர்களை வைத்து வேலை, வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக, சங்கர் ராஜா பணம் பெற்றதும், விசாரணையில் தெரிந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை