தி.மு.க., 'மாஜி' அமைச்சர் மகனிடம் போலீஸ் கிடுக்கிப்பிடி| Dinamalar

தி.மு.க., 'மாஜி' அமைச்சர் மகனிடம் போலீஸ் கிடுக்கிப்பிடி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தி.மு.க., 'மாஜி' மந்திரி மகனிடம், போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவன், அன்பழகன். மறைந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர், கோ.சி.மணியின் இரண்டாவது மனைவி மகன். இவன், சென்னை, மண்ணடியைச் சேர்ந்த, லியாகத் அலி என்பவனுடன் சேர்ந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வங்கி கிளையில், போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, எட்டு நடப்பு கணக்குகள் துவங்கி, 100 கோடி ரூபாய் செலுத்தி உள்ளான். இது குறித்து விசாரித்த, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சில மாதங்களுக்கு முன், வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற, லியாகத் அலியை கைது செய்தனர். ஆக., மாதத்தில் அன்பழகனை, அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது, சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பழகனை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் கைது செய்து, இரு நாட்கள் போலீஸ் காவலில் விசாரித்து உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: அன்பழகன், லியாகத் அலி ஆகியோர், போலி நிறுவனம் துவங்கி, துபாய், ஹாங்காங்கில் இருந்து, 80 கோடி ரூபாய்க்கு, எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி செய்துள்ளாக, கணக்கு காட்டி உள்ளனர். பின், பிரபல வங்கியின் கிளையில், போலி ஆவணங்கள் தாக்கல் செய்து, எட்டு நடப்பு கணக்குகள் துவக்கி உள்ளனர். அதில், 100 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர். அந்த தொகையில், 80 கோடி ரூபாயை, துபாய் உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில், சட்ட விரோதமாக முதலீடு செய்து, அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். அன்பழகனிடம், போலி ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் அதன் பின்னணி குறித்து விசாரித்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.