நீர் மின் நிலையங்களில் 100 மெகாவாட் உற்பத்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர் மின் நிலையங்களில் 100 மெகாவாட் உற்பத்தி

Added : செப் 13, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நீர் மின் நிலையங்களில் 100 மெகாவாட் உற்பத்தி

மேட்டூர்: மேட்டூர் அணையில், 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால், நீர் மின் நிலையங்களில், நேற்று காலை முதல், 100 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.மேட்டூர் அணை
மின் நிலையத்தில், 50 மெகாவாட், சுரங்க மின் நிலையத்தில், 200 மெகாவாட்
மின்சாரம் உற்பத்தி செய்யலாம். மேட்டூர் அணையில் இருந்து, குடிநீருக்காக வினாடிக்கு, 700 கன அடி நீர் திறந்த நிலையில், அணை மின் நிலையத்தில் மட்டும், 5 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.காவிரி புஷ்கர விழாவிற்காக, நேற்று முன்தினம் இரவு, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.இதனால், நேற்று மேட்டூர் அணை மற்றும் சுரங்க மின் நிலையங்களில், 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
நேற்று அணை நீர்மட்டம், 77.33 அடியாகவும், நீர் இருப்பு, 39.34 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. நேற்று முன்தினம், 16 ஆயிரத்து, 441 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 10 ஆயிரத்து, 165 கன அடியாக சரிந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை